Home » Posts tagged with » Congress (Page 8)

முதலமைச்சர் பதவியே முக்கியம்!

Comments Off on முதலமைச்சர் பதவியே முக்கியம்!

காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகியதாக அசோக் கெலாட் முதலமைச்சர் பதவி மட்டுமே முக்கியம் என்று கூறியுள்ளார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற வகையில் காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் போட்டியிட்டால் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயங்கிய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர் பதவியை விட முதல்வர் பதவியே மேல் என முடிவு செய்த அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் […]

Continue reading …

காங்கிரஸ் கட்சியில் திடீர் திருப்பம்!

Comments Off on காங்கிரஸ் கட்சியில் திடீர் திருப்பம்!

சோக் கெலாட் திடீரென்று காங்கிரஸ் கட்சியில் தலைவர் போட்டியிலிருந்த விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென அவர் போட்டியிலிருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக இருந்த அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக கூடும் என்பதால் புதிய முதலமைச்சரை […]

Continue reading …

தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை; ராகுல்காந்தி உறுதி!

Comments Off on தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை; ராகுல்காந்தி உறுதி!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி எங்கள் குடும்பத்திலிருந்து யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று கூறியுள்ளார். 22 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் நாளை முதல் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றுமை பாதயாத்திரையை ஒத்திவைத்து விட்டு திடீரென ராகுல்காந்தி டில்லி சென்றதால் அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, […]

Continue reading …

வானதி சீனிவாசனின் பரபரப்பு பேச்சு!

Comments Off on வானதி சீனிவாசனின் பரபரப்பு பேச்சு!

பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் காங்கிரஸ் ஒரு மூழ்கிய கப்பல், ராகுல் காந்தி நடைபயணம் சென்றாலும் எந்த பயனில்லை என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கி உள்ளார். இந்த நடைபயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இன்று தொடங்கும் இந்த நடைபயணம் 150 நாட்கள் கழித்து காஷ்மீரில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த நடை பயணம் குறித்து வானதி சீனிவாசன் எம்எல்ஏ “இறந்து […]

Continue reading …

கே.எஸ்.அழகிரி கேலி!

Comments Off on கே.எஸ்.அழகிரி கேலி!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி “தமிழக பாஜகவிற்கு இரண்டு தலைவர்கள்” என்று கிண்டலடித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி நெல்லையில் நிர்வாகிகள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, “தமிழக ஆளுநர் ரவி மிகச்சிறப்பாகச் செயல்படுகிறார். அண்ணாமலை விளம்பரத்திற்காக முரண்டான தகவல்கள் கூறி வருகிறார்” என்றார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் பாஜகவிற்கு 2 தலைவர்கள் இருக்கிறார்கள். […]

Continue reading …

ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்!

Comments Off on ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்!

காங்கிரஸ் கட்சியின் பிரபலமான ஜெய்ராம் ரமேஷ் குலாம் நபி ஆசாத் துரோகம் செய்து விட்டதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான குலாம்நபி ஆசாத் இன்று காலை அறிவித்திருந்தார். அவரது விலகல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தலைமை உயர் மரியாதையுடன் நடத்தப்பட்ட நபர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத் என்றும் அவர் இப்போது உண்மை முகத்தை காட்டி கட்சிக்கு துரோகம் […]

Continue reading …

ராகுல் காந்தி பாதயாத்திரை!

Comments Off on ராகுல் காந்தி பாதயாத்திரை!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரையாக செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை பாதயாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து பாதயாத்திரையை தொடங்குவதாகவும் 148 நாட்கள் நடக்கும் இந்த பாதயாத்திரை காஷ்மீரில் முடிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர். இப்பாதையில் ஆங்காங்கே இருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டுமென்றும் […]

Continue reading …

போராட்டம் செய்த எம்.பி. கைது!

Comments Off on போராட்டம் செய்த எம்.பி. கைது!

எம்.பி. ஜோதிமணி ராகுல் காந்தியை விசாரிக்கக்கூடாது என்று கூறி போராட்டம் செய்தததால் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியிடம் கடந்த இரண்டு நாட்களாக நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக அமலாக்கத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நேற்று 8.30 மணி நேரம் நடத்திய விசாரணை இன்றும் தொடர்ந்துள்ளது. இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு தொண்டர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். அமலாக்கத்துறை அலுவலகம் பலத்த காவல் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியை விசாரிப்பதை எதிர்த்து எம்.பி. […]

Continue reading …

காங். கட்சியிலிருந்து முக்கிய புள்ளி நீக்கம்!

Comments Off on காங். கட்சியிலிருந்து முக்கிய புள்ளி நீக்கம்!

காங்கிரஸ் கட்சி மேலிடம் முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே.வி.தாமஸை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் தேர்தல் பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சருமான கே.வி. தாமஸ்-ம் கலந்து கொண்டது மட்டுமல்லாது அக்கட்சியின் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்யப்போவதுமாக அறிவித்திருக்கிறார். திருக்காக்கரா இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கூட்டணி வேட்பாளராக டாக்டர் ஜோ ஜோசப் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கொச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் தேர்தல் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் எல்டிஎஃப் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் […]

Continue reading …

உத்தர பிரதேசத்தில் வன்முறை: ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி கைது

Comments Off on உத்தர பிரதேசத்தில் வன்முறை: ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி கைது

லக்கிம்பூர், அக் 4: உத்தர பிரதேசத்தில் கலவரத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற நேரில் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்திலும், விவசாயிகள் இத்தகைய போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள […]

Continue reading …