எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த ஒன்பது பேர் மரணமடைந்துள்ளனர். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து செய்தியாளர்களிடம் “கள்ள சாராயம் குடித்தவர்கள் மரணமடைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று சொல்லி போய் வருவது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. பொம்மை முதலமைச்சர் மற்றும் திறமையற்ற முதலமைச்சர் ஆளுகின்ற மாநிலத்தில் இப்படிப்பட்ட […]
Continue reading …அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “விரைவில் கழக ஆட்சி மலரும், நிர்வாக திறமையோடு நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரமும் பாதுகாப்பு அளிக்கப்படும்” என உறுதி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து, எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பக்கத்தில், “கடந்த வாரம் நேர்மையாக பணியாற்றிய வி.ஏ.ஓ. தூத்துக்குடி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார், சில தினங்களுக்கு முன்னால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு வி.ஏ.ஓ. மணல் கொள்ளையர்களால் கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார், தற்போது 2019 […]
Continue reading …ஏற்கனவே அதிமுக செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது அவசர செயற்குழு கூட்டம் குறித்த தேதியை அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 7ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை […]
Continue reading …திமுகவுக்கு கண்டனம் தெரிவித்தோடு மட்டுமல்லாமல் ஈரோடு கிழக்கில் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அபார வெற்றி பெற்றுள்ளார். இவர் அதிமுக வேட்பாளரை விட சுமார் 60000 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தவிர மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இந்நிலையில் திமுக வெற்றி குறித்து கருத்து கூறிய எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கு பார்முலா என புதிய ஜனநாயக படுகொலையை திமுக […]
Continue reading …ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர் புகழேந்தி ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்கவில்லை என்றால் அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க வேண்டும் என புகழேந்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக வேட்பாளராக தென்னரசு ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவிருப்பதால் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடும் சவால் கொடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு பெற்ற தென்னரசு வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரோட்டில் […]
Continue reading …இடைத்தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளதால் இரட்டை இலை சின்னத்திற்கு போட்டி வரலாம் என்று கூறப்படுகிறது. அதிமுக கட்சியில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே தலைமை குறித்த போட்டி எழுந்துள்ளது அனைவரும் தெரிந்த விஷயமே. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுசெயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார். ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் மற்றும் தேர்தல் ஆணையத்தால் இந்த முடிவு இன்னும் அங்கீகரிக்கப்படாத நிலையில் ஓ.பன்னீர்செல்வமே கட்சி […]
Continue reading …இன்று அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் இபிஎஸ் என்றால் என்ன? என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சமீபத்தில் அதிமுக பொதுக்குழு நடந்தது. இப்பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையின்போது இருதரப்பு வாதங்களிலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என்று வழக்கறிஞர்கள் கூறப்பட்டது. அப்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குறுக்கிட்டு ஓபிஎஸ் […]
Continue reading …முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் மட்டுமே நியாயமான பதவிகள் என்றும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுமென்றே செயற்கையான பதவிகளை உருவாக்கினார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “அதிமுக சட்ட விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை இணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டது. தொண்டர்கள் மூலம் தான் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை செயற்கையாக […]
Continue reading …இன்று அதிமுக கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம் என மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலை போலவே நாடாளுமன்ற தேர்தலையும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என அனைத்து மாவட்ட செயலாளர்களும் தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் பேசிய நத்தம் விசுவநாதன் பொருள்களில் போலியான பொருட்கள் இருப்பதை பார்த்திருக்கிறோம். […]
Continue reading …எடப்பாடி பழனிசாமி உதயநிதி அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடப்போகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி பதவியேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டு விழா நடைபெற இருக்கிறது. மிகப் பெரிய தியாகத்தைச் செய்தே நாட்டுக்கு உழைத்த மாமனிதன் உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை முடிசூட்டு விழா […]
Continue reading …