Home » Posts tagged with » Netrikkan (Page 189)

ஆவினின் புதிய அறிவிப்பு!

Comments Off on ஆவினின் புதிய அறிவிப்பு!

ஆவின் நிர்வாகம் 3 பால் வகைகளை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஆவின் நிறுவனம் டிலைட், சமன்படுத்தப்பட்ட மற்றும் நிறை கொழுப்பு பால் வகைகள் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3.5% கொழுப்பும், 8.5% இதர சத்துக்களும் கொண்ட ஊதா நிற பாக்கெட்டுகள், 3% கொழுப்பும், 8.5% இதர சத்துக்களும் கொண்ட இளஞ்சிவப்பு நிற பால் பாக்கெட்டுகள் மற்றும் 6% கொழுப்பும், 9% இதர சத்துக்களும் கொண்டிருக்கும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுக்கள் என 3 வகை பால் […]

Continue reading …

அன்னதானம் வழங்கிய நீடா அம்பானி!

Comments Off on அன்னதானம் வழங்கிய நீடா அம்பானி!

3000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு நீட்டா அம்பானியின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீடா அம்பானி அன்னதானம் வழங்கினார். முகேஷ் அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். இவரது மனைவி மற்றும் தொழிலதிபர் நீடா அம்பானி நேற்று தன் 60வது பிறந்தநாள் கொண்டாடினார். இதே நாளில் இந்தியாவில் மிகப்பெரிய மாலான ஜியோ வேர்ல்ட் பிளாசா திறக்கப்பட்டது. இதன் துவக்க விழாவில், அம்பானி குடும்பத்தினர் மற்றும் பாலிவுட் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். […]

Continue reading …

பெண்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ்!

Comments Off on பெண்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ்!

கடந்த செப்டம்பர் மாதம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இம்மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை வரவிருப்பதை அடுத்து முன்கூட்டியே பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாகவும் இதுகுறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தீபாவளி தினமான 12ம் தேதிக்கு முன்பே பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு […]

Continue reading …

வேகவரம்பை மீறும் வாகனங்களுக்கு அபராதம்!

Comments Off on வேகவரம்பை மீறும் வாகனங்களுக்கு அபராதம்!

வாகனங்களின் வேக வரம்பு நவம்பர் 4 முதல் அமலுக்கு வருகிறது. தற்போது இதற்காக அபராதம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னை பெரு நகர போக்குவரத்து காவல்துறை ஒரு முக்கிய அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 4 முதல் அமலுக்கு வருகிறது வாகனங்களின் வேக வரம்பு அமலுக்கு வருவதாக அறிவித்தது. அதில், ‘இலகுரக வாகனங்கள் 60 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். கனரக வகனங்கள் 50 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல […]

Continue reading …

பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகை!

Comments Off on பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகை!

பாஜகவிலிருந்து பிரபல நடிகையான விஜயசாந்தி விலகி காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நடிகை விஜயசாந்தி “தலைவாசல்” படத்தில் அறிமுகமானவர். சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்தும், அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்தும் தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக புகழ்பெற்றார். இவர் 1997ம் ஆண்டு பாஜகவில் இணைந்து அரசியல் பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவிலிருந்து விலகி அவர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் சார்பில் போட்டியிட்டு, 2009ம் ஆண்டு மெதக் தொகுதியில் போட்டியியிட்டு எம்பியானார். […]

Continue reading …

ஜார்க்கண்டில் தமிழக மருத்துவ மாணவர் பலி!

Comments Off on ஜார்க்கண்டில் தமிழக மருத்துவ மாணவர் பலி!

தமிழக மாணவர் ஜார்கண்ட் மாநிலத்தில் மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதன் என்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஜார்கண்ட் மாநிலத்தில் மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர் காணாமல் போனதாக கூறப்பட்டது. ஜார்கண்டிலுள்ள ஆர்ஐஎம்எஸ் என்ற மருத்துவமனை மருத்துவ கல்லூரி வளாகத்திலேயே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாணவர் மதன் உடல் அவர் படித்து வந்த மருத்துவ கல்லூரி அருகிலேயே கண்டெடுக்கப்பட்டு போலீசார் விசாரணை […]

Continue reading …

பல நூறு மதிப்புடைய நிலங்கள் மீட்பு!

Comments Off on பல நூறு மதிப்புடைய நிலங்கள் மீட்பு!

ரூ.800 கோடி மதிப்பில் சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 4.5 ஏக்கர் நிலம் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலமருகில் ஆக்கிரமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு ஆட்சியரரின் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ஆக்ரமிப்பு நிலத்தை மீட்டனர். 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்து இயங்கி வந்த அரசுடையை வங்கி, கிறிஸ்தவ மதப் பிரச்சார கூடம், வீடுகள் உள்ளிட்ட 30 கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue reading …

சூப்பர் ஸ்டார் இன்டோவில் கமல் திரைப்படம்!

Comments Off on சூப்பர் ஸ்டார் இன்டோவில் கமல் திரைப்படம்!

லைகா நிறுவனம் “இந்தியன் 2” திரைப்படத்தின் இன்ட்ரோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிலீஸ் செய்யப் போவதாக தெரிவித்துள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் பிரம்மாண்டமாக “இந்தியன் 2” திரைப்பட ஷூட்டிங் நடந்து வருகிறது. “இந்தியன்” படம் 3 பாகங்களாக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் ஷூட்டிங் முடிந்த பின், அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகி இப்படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியது. “இந்தியன் […]

Continue reading …

இந்தியா நம் வசம் என முதலமைச்சர் பேச்சு!

Comments Off on இந்தியா நம் வசம் என முதலமைச்சர் பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது என தெரிவித்துள்ளார். இந்தியா என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து அடுத்தாண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளன, அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், இன்று முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காக. சிஏஜியால் ஊழல் […]

Continue reading …

சிலிண்டர் விலை உயர்வு!

Comments Off on சிலிண்டர் விலை உயர்வு!

மாதம் முதல் தேதியானால் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.101 உயர்த்தப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளன. இன்றைய விலை உயர்வுக்கு பின், ஒரு சிலிண்டர் ரூ.1999.50க்கு விற்பனையாகிறது. கடந்த அக்டோபர் 1ம் தேதியன்று ஏற்கனவே ரூ.203 உயர்த்தியது. இன்று மீண்டும் ரூ.101.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான […]

Continue reading …