
அக்டோபர் 19ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் “லியோ.” படத்தில் திரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். படம் வெளியான 12 நாட்களில் 541+ கோடிகளை வசூலித்து மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது. ஆனால் தற்போது விடுமுறை தினங்கள் முடிந்துள்ளதால், கலெக்ஷன் குறைய ஆரம்பித்துள்ளது. படத்தின் வசூலை பெருக்கிட வெற்றிவிழாவை நவம்பர் 1ம் தேதி கொண்டாடவுள்ளது படக்குழு. இதற்காக அனுமதி கேட்டு காவல்துறையில் விண்ணப்பம் அளித்திருந்தனர். காவல்துறையும் […]
Continue reading …
“தங்கலான்” திரைப்படம் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவருகிறது. படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நவம்பர் 1ம் தேதியன்று இரவு 7 மணிக்கு “தங்கலான்” படத்தின் டீசர் வெளியாகும் என்று படத்தின் ரிலீஸ் ஜனவரி 26ம் தேதி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஷூட்டிங் மொத்தமாக முடிந்துவிட்டதாக சொல்லப்பட்டது. இப்போது மீண்டும் ஐந்து நாட்கள் […]
Continue reading …
“காஞ்ஜூரிங் கண்ணப்பன்” திரைப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்தின் 24வது திரைப்படம். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த “நாய் சேகர்” திரைப்படத்திலும் சதீஷ் நாயகனாக நடித்திருந்தார். இதையடுத்து தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்தின் 24வது திரைப்படத்திலும் சதீஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. ஆச்சர்யப்படதக்க வகையில் படத்தின் டிஜிட்டல் உரிமை நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் 9 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சதீஷ் படத்துக்கு இவ்வளவு டிமாண்ட்டா என ஆச்சர்யப்படவேண்டாம். விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதால் […]
Continue reading …
இயக்குனர் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் பெரியதாக வசூல் செய்யவில்லை. மணிரத்னம் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படத்தை இயக்கவுள்ளார். “நாயகன்” படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை மற்றும் புரமோஷன் வீடியோ ஷூட்டிங் சமீபத்தில் நடந்தது. அடுத்தாண்டு ஷூட்டிங் தொடங்க உள்ளது. இத்திரைப்படத்தில் […]
Continue reading …
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் எம்பி மஹுவா மொய்த்ரா “என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்பும் நபர்களால் என்னுடைய தலைமுடியை கூட தொட முடியாது” என பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். என் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்பும் நபர்களால் எனது தலை முடியை […]
Continue reading …
தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்படும் என அரசாணை வெளியிட்டது. அதன்படி அந்த அரசாணை இன்று முதல் அது அமலுக்கு வருகிறது. இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் அடுக்குமாடு குடியிருப்பில் பொது பயன்பாட்டிற்கான மின்சார கட்டண குறைப்பு அமலுக்கு வருகிறது. அதிகபட்சமாக 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அதற்கும் குறைவாகவும் உள்ள மின் தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டணம் […]
Continue reading …
கர்ப்பமாக இருந்த பசுமாடுகளை மதுரை மாவட்டத்தில் விஷம் வைத்து கொன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டியைச் சேர்ந்த பின்னியம்மாள் விவசாய கூலி தொழிலாளி. இவர் 3 பசுமாடுகளை வைத்து பால் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். தற்போது இவரது 3 பசுமாடுகளும் கர்ப்பமாக இருந்தாக கூறப்படுகிறது, இன்னும் சில தினங்களில் கன்றுகளை ஈன்றெடுக்கும் நிலையில் இருந்த இந்த பசுமாடுகளை நேற்று வழக்கம் போல தனது தோட்டத்து பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுவிட்டு […]
Continue reading …
டிசம்பர் மாதம் பிரதமர் மோடி வரும் தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற இருப்பதையடுத்து பல மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவ்வகையில் அடுத்த கட்டமாக வரும் டிசம்பர் முதல் வாரத்தில் பிரதமர் மோடி தமிழக வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குலசேகரப்பட்டணம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுவார் என்றும் இது குறித்த விழாவில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. மேலும் பாம்பன் பாலத்தில் ஒரு பகுதியை […]
Continue reading …
தக்காளி விலை 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கடந்த சில மாதங்களுக்கு முன் விற்பனையானது. தற்போது தக்காளி விலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போது தக்காளியை அடுத்து வெங்காயம் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 50 முதல் 70 ரூபாய் வரை வெங்காயம் விற்றுக் கொண்டிருந்த நிலையில் இன்று சதம் அடித்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தையில் இன்று ஒரு கிலோ வெங்காயம் […]
Continue reading …
தமிழக அரசு தீபாவளி பண்டிகை அன்று இந்த ஆண்டும் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், “தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்படும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி உண்டு. தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் […]
Continue reading …