
ஓய்வூதியம் பெறுவதற்காக இறந்த தந்தையின் மனைவியாக 10 ஆண்டுகள் அவருடைய மகள் நடித்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வருவாய் துறை அலுவலகத்தில் பணியாற்றியவர் வஜாஹத் உல்லா கான். கடந்த ஜனவரி மாதம் காலமானார். அவருக்கு முன்பே அவருடைய மனைவி சபியா பேகம் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவருடைய மகள் பர்வேஸ் என்பவர் 10 ஆண்டுகளாக அவருடைய மனைவி என்று கூறி ஓய்வூதியம் பெற்று வந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் கொடுத்து […]
Continue reading …
பெண் காவல் உதவி ஆய்வாளர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருகோகரணம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளராக சங்கீதா பணிபுரிந்து கொண்டிருந்தார். இவர் திடீரென அதிகளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவல் உதவி ஆய்வாளர் சங்கீதாவின் தற்கொலைக்கு வழக்கறிஞர்கள் கொடுத்த மன அழுத்தமே காரணம் […]
Continue reading …
இன்று பாராளுமன்றத்தில் “மோடி என்ன பரமாத்மாவா அல்லது கடவுளா? வரட்டும் பார்க்கலாம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே ஆவேசமாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் மோடியின் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இவ்விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு இன்று பிரதமர் மோடி பதிலளித்தார். பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்திற்கு வந்து எதிர்க்கட்சியினர்களை கிழிக்க போகிறார் என பாஜக எம்பிகள் குரல் […]
Continue reading …
மதுரை பாஜகவினர் “மலையோடு மோதி மண்ணாகிவிட வேண்டாம்” என எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பாஜக பிரமுகர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் கடந்த சில நாட்களாகவே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி பேட்டியளித்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்று செல்லூர் ராஜூ கூறியதற்கு அண்ணாமலை “அரசியல் விஞ்ஞானிகள் எல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்திருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் […]
Continue reading …
பள்ளி சிறுமியை சென்னையில் பசுமாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக வீடுகளில் ஆடு, மாடு, பூனைகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகிறது. ஆனால், இவற்றை பொது இடங்களில் விடுவதால் ஒரு சில நேரங்களில் மக்கள், வாகன ஓட்டிகள், குழந்தைகள் முதற்கொண்டு பலரும் பாதிக்கப்படுகிறார்கள். சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ. பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசுமாடு, அவ்வழியே சென்ற பள்ளி சிறுமியை முட்டித் தூக்கி வீசியது. அந்த பசு மாட்டிடம் இருந்து சிறுமியை மீட்கப் பலரும் […]
Continue reading …
இன்று உலகம் முழுதும் உள்ள திரையரங்குகளில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் “ஜெயிலர்.” ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. “ஜெயிலர்” படம் காலை 9 மணிக்குத்தான் முதல் ஷோ ஆரம்பமானது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் என்ன ரெஸ்பான்ஸ் உள்ளது? படம் எப்படி உள்ளது? […]
Continue reading …
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “லியோ” திரைப்படம் இவ்வாண்டில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படம் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுதும் ரிலீசாகவுள்ளது. படத்தில் விஜய்யுடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்போது திடீரென “லியோ” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக […]
Continue reading …
உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் பொன்முடி மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மிக மோசமான விசாரணை செய்யப்பட்டுள்ளது என கருத்து தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்து வேலூர் மாவட்டம் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இவ்வழக்கை தானாகவே முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஏன் எடுத்துள்ளேன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். இவ்வழக்கில் மிக மோசமான முறையில் […]
Continue reading …
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டில்லி நிர்வாக மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் தலைநகர் டில்லியை ஒரு மாநகராட்சி போல தரம் குறைக்கும் இந்த மசோதாவை நிறைவேற்றிய நாள் மக்களாட்சியின் கருப்பு நாள் என விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடியில், தலைநகர் டில்லியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த நடைமுறைக்கு மாறாக டெல்லி நிர்வாக மசோதா எவ்வாறு வேறுபட்டு இருக்கிறது என்பதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் தெளிவுபடுத்த […]
Continue reading …
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கருகும் நெற்பயிருக்கு தண்ணீர் கேட்டு பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தை நடத்தியது. நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இப்போராட்டத்தின் போது பயிர் காப்பீடு செய்த ஒவ்வொரு விவசாயிக்கும் தனிப்பட்ட முறையில் இழப்பீடு வழங்கும் வகையில் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் காவேரி டெல்டா பகுதியில் கருகும் நெற்பயிர்களை பாதுகாக்க காவிரிகள் விரைவில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் 10 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் […]
Continue reading …