சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 66 பேர் உயிரிழந்தனர். இன்னும் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. தற்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு கள்ளச்சாராயம் வந்ததாகவும் அதை குடித்த ஏழு பேர் மருத்துவமனையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இச்சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் […]
Continue reading …சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட சாராயத்தை குடித்த 7 பேர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி சம்பவத்திலிருந்து இன்னும் தமிழக அரசு பாடம் கற்கவில்லையா? என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர், “விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பூரிகுடிசை எனும் கிராமத்தில் புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட […]
Continue reading …கிரிக்கெட் வீரர் தோனி இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த உலகத்தரமான கிரிக்கெட்டர். சச்சினுக்குப் பிறகு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற கிரிக்கெட்டராக தோனிதான் இருந்து வருகிறார். 2004ம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி 2007ம் ஆண்டு இந்திய அணிக்குக் கேப்டனாகி டி 20 உலகக் கோப்பையை தன் தலைமையில் பெற்றுத் தந்தார். பின்னர் 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ்கோப்பை தொடர் ஆகியவற்றையும் அவர் தலைமையில் இந்தியா வென்றது. தோனி […]
Continue reading …கர்ப்பிணி ஒருவருக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு இருந்ததையடுத்து அந்த சத்துணவு கொடுத்த அங்கன்வாடி மையத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அங்கன்வாடிகளில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட பொட்டலத்தில் சிறிய வகை பாம்பு இறந்து கிடந்ததை பார்த்து அந்த கர்ப்பிணி பெண் அதிர்ச்சியடைந்தார். இதனை தற்போது அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்யப்படுவதாகவும் அங்கன்வாடியில் பணி செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடந்து […]
Continue reading …தேனி பகுதியில் டிரைவர் ஒருவர் ஐடி ரெய்டு வருவோம் என வருமானவரித்துறை அதிகாரி போல் பேசியுள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வருமானவரித்துறை அதிகாரி என கூறி தொழிலதிபர்களிடம் மோசடி செய்து வந்த விக்னேஷ்குமார் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் வருமானவரித்துறை புலனாய்வு பிரிவில் ஆக்டிங் ஓட்டுநராக பணி புரிந்த விக்னேஷ்குமார். இவர் வருமானவரித்துறை அதிகாரி எனக் கூறி பல தொழிலதிபர்களை தொடர்பு […]
Continue reading …கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய வேட்பாளர் ஜோ பைடனுக்கு பதில் போட்டியிட திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இருவரும் சமீபத்தில் நேருக்கு நேர் விவாதம் செய்த நிலையில் அதில் ஜோபைடன் வாதிட திணறியதாகவும் கூறப்பட்டது. ஜோ பைடனுக்கு வாதிடம் திறன் மோசமாக இருப்பதால் அவர் வெற்றி பெறுவது கடினம் என்றும் எனவே […]
Continue reading …ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா தான் பிரச்சாரம் செய்த மக்களவை தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்ததால், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கிரோடி லால் மீனா அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில், 7 மக்களவை தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வி அடைந்தால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என கூறியிருந்தார். அவரது சொந்த தொகுதியான தௌசா உட்பட நான்கு தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது. இதனால் அதிருப்தியில் […]
Continue reading …பாஜக தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தன் மீது குற்றம் சுமத்திய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளரிடம் அவர், “புதிய கல்விக் கொள்கையில் இந்தி கட்டாய மொழி இல்லை, அது ஆப்ஷனலாக மாற்றப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை அறிவித்த பின்னர்தான் தமிழ் மொழியை பயிற்று மொழி என திமுக அரசு அறிவித்தது. இந்தி திணிப்பை எதிர்க்கும் திமுக, ஏன் உருது திணிப்பை எதிர்க்கவில்லை? […]
Continue reading …பிரதமர் மோடியை 20 ஓவர் உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 20 ஓவர் உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. உலக கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள், கடும் போராட்டங்களுக்கு மத்தியில் இன்று காலை நாடு திரும்பினர். டில்லி விமான நிலையத்திற்கு காலை ஏர் இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம் […]
Continue reading …தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து விசாரணை செய்தபோது அது போலியான மிரட்டல் என்று தெரிய வருகிறது. சமீப காலத்தில் மூன்று முறை சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து விட்டது. அதேபோல் கவர்னர் மாளிகை உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாகி வருகிறது. இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகவும் சென்னை அண்ணா […]
Continue reading …