கிரிக்கெட் வீரர் தோனி இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த உலகத்தரமான கிரிக்கெட்டர். சச்சினுக்குப் பிறகு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற கிரிக்கெட்டராக தோனிதான் இருந்து வருகிறார். 2004ம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி 2007ம் ஆண்டு இந்திய அணிக்குக் கேப்டனாகி டி 20 உலகக் கோப்பையை தன் தலைமையில் பெற்றுத் தந்தார்.

பின்னர் 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ்கோப்பை தொடர் ஆகியவற்றையும் அவர் தலைமையில் இந்தியா வென்றது. தோனி தன்னுடைய பள்ளித் தோழியான சாக்ஷியை 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஸீவா என்ற பெண் குழந்தை இருக்கிறது. தோனி- சாக்ஷி தம்பதியர் தங்கள் 15வது திருமண நாளை இன்று கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
Related posts:
டில்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் புரளியே!
பெங்களூர், ஓசூர், தர்மபுரி, சேலம் வழித்தடத்தில் ரயில் நிறுத்தம்?
எஸ்.பி.பி விரைவில் குணமடைந்து வர நான் பிரார்த்திக்கிறேன் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ...
தனி ஒருவராக மூன்று கி.மீ தூரத்துக்கு கால்வாய் வெட்டிய விவசாயி; ட்ராக்டர் பரிசாக அளித்த ஆனந்த் மகிந்த...



