Home » Posts tagged with » Netrikkan (Page 458)

மியான்மரில் முன்னாள் தலைவருக்கு சிறை தண்டனை!

Comments Off on மியான்மரில் முன்னாள் தலைவருக்கு சிறை தண்டனை!

மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி மியான்மர் நாட்டை ராணுவம் கைப்பற்றியது. இந்நிலையில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக ஆங் சான் சுகிக்கு ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டின் பெயரில் நடந்த வழக்கில் […]

Continue reading …

தேர்தல் முறையை பற்றி கமல்ஹாசன் கருத்து!

Comments Off on தேர்தல் முறையை பற்றி கமல்ஹாசன் கருத்து!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் கவர்னர் நியமனத்தில் தேர்தல் முறை அவசியம் என்று கூறியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் தொடங்கினார். அவர் எதிர்பார்த்த கட்சி ஆரம்பத்தில் வளர்ந்து வந்த நிலையில், கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்வி காரணமாக அவர் கட்சியை விட்டு முக்கிய நிர்வாகிகள் வெளியேறினர். அதன்பின், பிக்பாஸ் மற்றும் சினிமாவில் தீவிரமாக இயங்கி வருகிறார். இவரது நடிப்பில் “விக்ரம்” வெளியான நிலையில், […]

Continue reading …

கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

Comments Off on கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

கன்னியாகுமரியில் வருகிற 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று அறிவித்துள்ளார் அம்மாவட்ட கலெக்டர். வரும் 8ம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் செப்டம்பர் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று அம்மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார். கேரளாவில் வருகிற 8ம் தேதி மிகவும் சிறப்பாக ஓணம் பண்டிகையை கொண்டாட உள்ளன. இதையடுத்து அம்மாநிலத்தில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 8ம் தேதி குமரி […]

Continue reading …

சக மாணவியின் பெற்றோர் செய்த கொடூம்!

Comments Off on சக மாணவியின் பெற்றோர் செய்த கொடூம்!

மகளின் சக மாணவன் நன்றாக படிக்கும் காரணத்தால் விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ள பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். காரைக்காலில் வசித்து வரும் மாணவர் மணிகண்டன் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அதே வகுப்பில் படித்து வரும் ஒரு மாணவியைவிட மணிகண்டன் நன்றாகப் படித்து, அதிக மதிப்பெண் பெற்று வந்துள்ளார். ஆனால், மாணவியால் மணிகண்டனை படிப்பில் மீறமுடியவில்லை. இந்நிலையில், பள்ளி ஆண்டு விழா ஒத்திகையில் கலந்துவிட்டு வீட்டிற்குத் […]

Continue reading …

பிளாஸ்டிக் கவரில் தொழிலதிபரின் பிணம்!

Comments Off on பிளாஸ்டிக் கவரில் தொழிலதிபரின் பிணம்!

மர்ம நபர்கள் சென்னையில் தொழிலதிபரை கொன்று பிளாஸ்டிக் கவரில் வைத்து வீசிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழிலதிபர் பாஸ்கரன் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர். இவர் ரியல் எஸ்டேட், கட்டுமானம், பைனான்ஸ், சினிமா தயாரிப்பு உட்பட பல தொழில்களில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட சென்ற நிலையில், அவர் வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. அவர் செல்போன் எண்ணும் சரியாக இயங்கவில்லை. ஆகவே, இதுகுறித்து அவரது குடும்பத்தினர் போலீசில் […]

Continue reading …

சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

Comments Off on சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!
சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னை மாநகராட்சி சொத்துவரி மற்றும் தொழில் வரியை இம்மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் தொழில் செய்யும் தொழிலதிபர்கள் சொத்துவரி மற்றும் தொழில் வரியை இந்த மாத இறுதிக்குள் கட்ட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சொத்து வரி செலுத்தாமலிருந்து வரும் சொத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தொழில் வரியை செலுத்தாதவர்களுக்கு இம்மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இம்மாதத்திற்குள் சொத்து […]

Continue reading …

பாடகர் பம்பா பாகியா மறைவு!

Comments Off on பாடகர் பம்பா பாகியா மறைவு!

பாடகர் பம்பா பாகியா இன்று காலை திடீரென மரணமடைந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இச்செய்தி திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 49 வயதான பம்பா பாகியா உடல்நிலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார். இதையடுத்து திரையுலகினர் பலரும் சமூக வலைதளங்களில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “பொன்னி நதி” என்ற பாடலை பம்பா பாகியா ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பாடியுள்ளார். இந்நிலையில் மறைந்த பிரபல பாடகர் […]

Continue reading …

இரண்டு நாட்டு முதலமைச்சர்கள் சந்திப்பு!

Comments Off on இரண்டு நாட்டு முதலமைச்சர்கள் சந்திப்பு!

இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இருவரும் சந்தித்துள்ளனர். தென்மண்டல கவுன்சிலின் முப்பதாவது கூட்டம் கேரளாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் சென்றார். இக்கூட்டத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் தென் மண்டல கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து “திராவிடம்“ என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் […]

Continue reading …

டுவிட்டரில் கருத்து மோதல்!

Comments Off on டுவிட்டரில் கருத்து மோதல்!
டுவிட்டரில் கருத்து மோதல்!

பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் நிதியமைச்சர் பி.ஆர்.ஆர்.பழனிவேலுக்கும் கருத்து மோதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பி.டி.ஆர். அவரது டுவிட்டர் பக்கத்தில் பாஜக நிர்வாகியை பிளாக் செய்துள்ளார். அண்ணாமலை சமீபத்தில், “பெரிய பரம்பரையில் வெள்ளிக்கரண்டியுடன் பிறந்தவர் என்பதைத் தவிர இப்பிறவியில் ஏதேனும் நல்லது செய்தது உண்டா? தமிழக அரசியலில் பிடி.ஆர்.பழனிவேல் ஒரு சாபக்கேடு. தமிழக நிதியமைச்சரை செருப்புக்கு சமமில்லை என்று கடுமையாக சாடினார். இதற்கு சீமான், காங்கிரஸ் தலைவர்கள், திமுகவினர் உட்பட பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்நிலையில், பாஜகவில் குறிப்பிட்ட […]

Continue reading …

இரட்டை டவர் இடத்தில் கோயிலா?

Comments Off on இரட்டை டவர் இடத்தில் கோயிலா?

நொய்டாவில் சமீபத்தில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டது. அக்கோபுரம் இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நொய்டா இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் மற்றும் சிவன் கோயில் சிலைகளுடன் கூடிய பிரம்மாண்டமான கோயில் கட்ட வேண்டும் அப்பகுதியில் குடியிருப்புவாசிகள் நலச்சங்கம் பரிந்துரைள்ளதாக கூறப்படுகிறது. இப்பரிந்துரையின் அடிப்படையில் அந்த இடத்தில் விரைவில் கோயில் கட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continue reading …