சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

Filed under: சென்னை |

சென்னை மாநகராட்சி சொத்துவரி மற்றும் தொழில் வரியை இம்மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் தொழில் செய்யும் தொழிலதிபர்கள் சொத்துவரி மற்றும் தொழில் வரியை இந்த மாத இறுதிக்குள் கட்ட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சொத்து வரி செலுத்தாமலிருந்து வரும் சொத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தொழில் வரியை செலுத்தாதவர்களுக்கு இம்மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இம்மாதத்திற்குள் சொத்து வரி, தொழில் வரி செலுத்தாவிட்டால் அவர்கள் மீது அபராத நடவடிக்கை உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நோட்டீஸ்க்கு விளக்கம் அளிக்காமல் இருக்கும் சொத்துக்கள் சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.