Home » Posts tagged with » Netrikkan (Page 47)

சென்செக்ஸ் 4300 புள்ளிகள் சரிவு!

Comments Off on சென்செக்ஸ் 4300 புள்ளிகள் சரிவு!

இன்று காலை முதல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. பாஜக தனித்து ஆட்சியமைக்க வழி இல்லை என்பதால் பங்குச்சந்தை படுமோசமாக சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் பாஜக கூட்டணி 295 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தனித்து ஆட்சி அமைக்க வழி இல்லை என்றும் கூட்டணி ஆட்சிக்கு மட்டுமே சாத்தியம் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து பங்குச்சந்தை இன்று காலை […]

Continue reading …

ஆந்திர முதல்வராகிறார் சந்திரபாபு நாயுடு!

Comments Off on ஆந்திர முதல்வராகிறார் சந்திரபாபு நாயுடு!

பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததை அடுத்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது. ஆந்திர சட்டசபை தேர்தலில் முடிவின்படி தெலுங்கு தேசம் கட்சி 133 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக எட்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் கூட்டணியாக போட்டியிட்டன. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 13 தொகுதிகளில் […]

Continue reading …

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி!

Comments Off on 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி!

திமுக கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலின் முதல் கட்டத்தில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி தொடங்கி எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. திமுக கூட்டணி, அனைத்து தொகுதிகளிலும் […]

Continue reading …

6 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி!

Comments Off on 6 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி!

இந்தியளவில் முன்னணியில் உள்ள 6 சுயேட்சை வேட்பாளர்களின் பக்கம் தேசிய கட்சிகளின் கவனம் திரும்பியுள்ளது. 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் நடந்து முடிந்துள்ளது. இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 295 இடங்களில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸின் இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னணியில் உள்ளது. பிற கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் 17 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். தேர்தலில் தற்போதைய நிலவரப்படி தேசிய கட்சி வேட்பாளர்களையும் தாண்டி 6 […]

Continue reading …

தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி!

Comments Off on தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி!

தேர்தல் ஆணையம் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தூத்துக்குடி தொகுதியின் முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழி 426617 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை அடுத்து அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி என்பவர் 123214 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் 303403. இத்தொகுதியில் நாம் தமிழர் […]

Continue reading …

கங்கனா வெற்றி! அமைச்சர் பதவிக்கு இடம் காலி!

Comments Off on கங்கனா வெற்றி! அமைச்சர் பதவிக்கு இடம் காலி!

பாஜக சார்பில் இமாச்சல பிரதேசத்தில் போட்டியிட்ட கங்கனா ரனாவத் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என பேச்சுகள் எழுந்துள்ளது. இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பிரபல இந்தி நடிகையான கங்கனா ரனாவத் பல ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளை தொடர்ந்து பேசி வந்தவர். இம்முறை தேர்தலில் பாஜக சார்பில் அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் மண்டி தொகுதியில் போட்டியிட்டார். […]

Continue reading …

7வது முறையாக கிருஷ்ணசாமி தோல்வி!

Comments Off on 7வது முறையாக கிருஷ்ணசாமி தோல்வி!

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே ஆறு முறை போட்டியிட்ட ஏழாவது முறையாக போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்துள்ளார். தென்காசி தொகுதியின் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கும் நிலையில் அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் என்பவர் 338221 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். அவருக்கு கிடைத்த வாக்குகள் 182193 ஆகும். அதேபோல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் […]

Continue reading …

லைவ் டிவியில் கதறி அழுத கருத்து கணிப்பு நிபுணர்!

Comments Off on லைவ் டிவியில் கதறி அழுத கருத்து கணிப்பு நிபுணர்!

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்களவை தேர்தலில் கருத்துக்கணிப்பில் தவறான முடிவை வெளியிட்டதற்காக கருத்துக்கணிப்பு நிபுணர் கதறி அழுத சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது. 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்து இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1ம் தேதி 7வது கட்ட தேர்தலும் முடிந்த கையோடு பல கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் பாஜக, காங்கிரஸ் கூட்டணிகள் எவ்வளவு இடங்களில் வெற்றிபெறும், யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வந்தனர். அவ்வாறாக கருத்துக்கணிப்பில் ஈடுபட்டு ஆக்ஸிஸ் […]

Continue reading …

நிதிஷ்குமார் மீண்டும் அணி மாறுகிறாரா?

Comments Off on நிதிஷ்குமார் மீண்டும் அணி மாறுகிறாரா?

இன்று நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் கூட்டணி ஆட்சி தான் அமைக்க வேண்டி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் சிலர் பாஜக கூட்டணியில் உள்ள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சந்திரபாபு நாயுடு உடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் வெற்றி […]

Continue reading …

புதுப்பேட்டை குறித்து தனுஷ்!

Comments Off on புதுப்பேட்டை குறித்து தனுஷ்!

சமீபத்தில் இயக்குனர் செல்வராகவனின் படங்களான “என் ஜி கே” மற்றும் “நானே வருவேன்” படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்றது. அடுத்து அவர் தன்னுடைய எவர்க்ரீன் ஹிட் படமான “7ஜி ரெயின்போ காலணி” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவரின் பழையப் படங்களான “புதுப்பேட்டை,” “காதல் கொண்டேன்” மற்றும் “7 ஜி ரெயின்போ காலணி” உள்ளிட்ட படங்களை […]

Continue reading …