
போக்குவரத்து காவல்துறை சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. சென்னையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதி இன்று முதல் அமலுக்கு வருவதாக […]
Continue reading …
வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் பருவமழையால் குறைந்துள்ளது. இதனையடுத்து தக்காளியின் விலை தொடர்ந்து உயரத் தொடங்கி உள்ளது. டந்த மாதத்தில் ரூ.10 விற்று வந்த தக்காளில் வேகமாக விலை உயர்ந்து கிலோ ரூ.120-ஐ தொட்டது. தக்காளி விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தெற்கு நகர இளைஞரணி பொருளாளரான அக்கீம் என்பவரின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு குண்டுவெடிக்கும் என்று நேற்றிரவு இரவு 11.30 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் போன் செய்துவிட்டு போனை துண்டித்துள்ளார். இதுகுறித்து தேனாம்பேட்டை காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். உடனே, போலீசார் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று அதிரடி சோதனை செய்தனர். அங்கு சந்தேகம் கொள்ளும்படியாக எந்தப் பொருட்களும் இல்லை. இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அந்த போன் நம்பரை வைத்து யார் போன் செய்து மிரட்டல் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் மே 24ம் தேதி திறக்கப்படும் என அறிவித்துள்ளார். அறிக்கையில் கூறியதாவது:& தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையிலிருந்து சென்ற ஆண்டு குறித்த நாளான ஜூன் 12ம் நாளன்று குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்பட்டு, குறுவை நெல் சாகுபடியில் புதிய சாதனை படைக்கப்பட்டது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டுர் அணைக்கு அதிக நிர்வரத்து உள்ளது. இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் […]
Continue reading …
பீகாரில் மின்னல் தாக்கியதில் 33 பேர் பலியாகி உள்ளனர். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் தங்களது இரங்கல் தெரிவித்துள்ளனர். பீகாரில் இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழையால் குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் டுவிட்டரில் மக்கள் இறந்ததற்கு வேதனையை வெளிப்படுத்தினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார். இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டுவீட்டரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தனது […]
Continue reading …
ஒமைக்கிரான் BA4 என்ற புதிய வகை வைரஸ் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதால் 7 நாட்களிலேயே குணமடைந்துள்ளார். சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், “நாவலூரில் ஒரு குடும்பத்தை சேர்ந்த அம்மா மற்றும் மகளுக்கு 2 பேருக்கு மே 4ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் இரண்டு பேரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள். ஒரே வீட்டில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவர்களின் மாதிரிகள் ஆய்வுக்காக […]
Continue reading …
அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழையால் பெரும் வெள்ள பாதிப்பு காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். நீர் வடியாததால் வெள்ளத்தால் வாடும் அசாம் மக்கள்- ரயில் தண்டவாளத்தில் தங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுவரை சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் உள்ள 29 மாவட்டங்களைச் சேர்ந்த 2,585 கிராமங்கள் இந்த வெள்ளப் பேரிடரில் சிக்கியுள்ளன. நகவோன் மாவட்டம் தான் இருப்பதிலேயே மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு சுமார் 3.3 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
Continue reading …
டில்லியில் பிரேசிலில் நடைபெற்ற காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பிரேசில் நாட்டில் காது கேளாதோருக்கான 24வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த 65 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மே 15ம் தேதி வரை நடைபெற்ற டெப்லிம்பிக்ஸ் போட்டிகளில், 72 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,100 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 11 போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணி, 8 […]
Continue reading …
“தி லெஜண்ட்” திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அண்ணாச்சி சரவணன் நடித்துள்ளார். இப்படத்தின் “வாடிவாசல்” என்ற பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலில் சரவணன் மற்றும் ராய் லட்சுமி ஆகிய இருவரும் திருவிழா நடக்கும் இடத்தில் குத்தாட்டம் ஆடுவது போன்று காட்சிகள் உள்ளன. மிகவும் வண்ணமயமாக ஏராளமான பொருட்செலவில் திருவிழாக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த […]
Continue reading …
“வெந்து தணிந்தது காடு” என்ற திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தில் சிம்பு நடிக்க, சித்தி இதானி ஜோடியாக நடித்துள்ளார். ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் போன்றோரும் நடித்துள்ளனர். அஜித் விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்களே திரையரங்குகளில் ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீஸாகி வருகின்றன. இந்நிலையில் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கி இருப்பதாகவும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன […]
Continue reading …