Home » Posts tagged with » Netrikkan (Page 522)

பாகுபலி பாணியில் சூர்யா படம்!

Comments Off on பாகுபலி பாணியில் சூர்யா படம்!

நடிகர் சூர்யா நடிப்பில் பாகுபலி பட பாணியில் திரைப்படம் உருவாக போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில் கார்த்திக் நடித்து ஒரு படம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெரிவிக்கப்பட்டது. இப்படம் ஒரு சரித்திர கதையம்சம் கொண்டது என்றும் இப்படத்தை இரண்டு பாகமாக தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும், சூர்யா இத்திரைப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. திரைக்கதை தயாராக இருப்பதாகவும் வரும் ஜூலை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. […]

Continue reading …

தீபாவளிக்கு வெளியாகிறது கார்த்தி திரைப்படம்!

Comments Off on தீபாவளிக்கு வெளியாகிறது கார்த்தி திரைப்படம்!
தீபாவளிக்கு வெளியாகிறது கார்த்தி திரைப்படம்!

வரும் ஆண்டு தீபாவளிக்கு நடிகர் கார்த்திக் நடித்து, பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள “சர்தார்” திரைப்படம் வெளிவர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். இவர் இயக்கத்தில் கார்த்தி நடித்து “சர்தார்” என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ராஷி கண்ணா உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. நாளை கார்த்திக்கின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. சர்ப்ரைஸ் அறிவிப்பாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி […]

Continue reading …

சுட்டெறிக்கிறது வெயில்!

Comments Off on சுட்டெறிக்கிறது வெயில்!
சுட்டெறிக்கிறது வெயில்!

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று சென்னையில் 104 டிகிரியை தாண்டியது வெப்பநிலை. அக்கினி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இடையே வங்க கடலில் ஏற்பட்ட புயலால் பல பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் வெப்பநிலை குறைந்திருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 104டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. சென்னையின் பல பகுதிகளில் 102 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சி, […]

Continue reading …

அண்ணா பல்கலைகழகலையிலும் கொரோனா!

Comments Off on அண்ணா பல்கலைகழகலையிலும் கொரோனா!

அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னை ஐஐடியில் முன்னதாக கொரோனா உறுதியான நிலையில் தற்போது அண்ணா பல்கலைகழகத்திலும் கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஐடியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்புகள் அங்கு குறைந்தது. தற்போது அண்ணா பல்கலைகழகத்தில் ஒரே நாளில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இது மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue reading …

சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!

Comments Off on சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை!

மீண்டும் 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் எச்சரித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில காலமாக குறைந்து வந்த நிலையில் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணை திறப்பு

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணை திறப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி டெல்டா குறுவைப் பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேட்டூர் அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று காலை 11.15 மணி அளவில் மதகுகளை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலில் சுமார் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி என்ற அளவில் நீர் திறந்து விடப்பட்டது. அணையில் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் […]

Continue reading …

சடலத்துடன் 2 நாட்கள் இருந்த பெண்

Comments Off on சடலத்துடன் 2 நாட்கள் இருந்த பெண்

சென்னையில் இறந்த சடலத்துடன் 2 நாட்கள் ஒரு பெண் இருந்துள்ளார். நிர்வாணமாக இருந்த கணவரின் இறந்த சடலத்துடன் 2 நாட்கள் இருந்த பெண் ஒருவர் இருந்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் உள்பக்கம் பூட்டப்பட்ட வீட்டில் அசோக் பாபு என்பவர் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். அவர் இறந்தது கூட தெரியாமல் கணவனின் சடலத்துடன் 2 நாட்கள் அவருடைய மனைவி இருந்ததாக தெரிகிறது. இரண்டு நாட்களாக எந்த போனையும் எடுக்காததால் வெளியூரில் உள்ள அவரது மகள் சந்தேகமடைந்து உடனடியாக போலீசுடன் வீட்டுக்கு வந்து […]

Continue reading …

போக்குவரத்து பாதுகாப்பின் விதிமுறைகள்

Comments Off on போக்குவரத்து பாதுகாப்பின் விதிமுறைகள்

போக்குவரத்து பாதுகாப்பு துறை ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது என்பதையும் தெரிவித்துள்ளது. சென்னையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம் என கூறப்பட்டு இந்த புதிய விதி நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. நேற்று சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் பலர் மீது வழக்குப்பதிவு […]

Continue reading …

கர்நாடக முன்னாள் முதல்வர் ஆவேசம்!

Comments Off on கர்நாடக முன்னாள் முதல்வர் ஆவேசம்!

கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுவது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து இந்து கோவில்கள் அருகே இஸ்லாமிய கடைகள் செயல்பட தடை விதிப்பது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பல பகுதிகளில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையா “நான் ஒரு இந்து, இதுவரை மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை. ஆனால் நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். என்னை மாட்டுக்கறி உண்ணக்கூடாது என சொல்ல […]

Continue reading …

ஹாலிவுட்டில் தனுஷூக்கு அங்கீகாரம்!

Comments Off on ஹாலிவுட்டில் தனுஷூக்கு அங்கீகாரம்!

“கிரே மேன்” திரைப்படம் விரைவில் தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கிறது. “தி கிரே மேன்” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்பு வெளிவந்ததுள்ளது. இத்திரைப்படம் அவெஞ்சர்ஸ் இயக்குனர்களுடையது. “இத்திரைப்படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ் நடிக்கிறார்” எழுத்தாளர் மார்க் கிரேனி தெரிவித்துள்ளார். சமீபத்தில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஜூன் 22ம் தேதி அத்திரைப்படம் ரிலீசாக […]

Continue reading …