Home » Posts tagged with » Netrikkan (Page 526)

எச்.ராஜா கைது?

Comments Off on எச்.ராஜா கைது?

ஹெச் ராஜா கைது செய்யப்பட்டதாக தகல்வகள் வெளியாகி உள்ளன. இன்று பழனியில் நடைபெற இருந்த ஆரத்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்தார் பாஜக தலைவர்களில் ஒருவரான எச். ராஜா. இந்நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளிக்காத நிலையில் அரசியல் தலைவர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரக்கூடாது என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை மீறி எச். ராஜா இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்ததாகவும் அதனால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். […]

Continue reading …

பயோபிக் படம் எடுக்கவிருக்கும் வெற்றிமாறன்!

Comments Off on பயோபிக் படம் எடுக்கவிருக்கும் வெற்றிமாறன்!

வெற்றி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் மிகவும் கவனமாக இருப்பதை பார்த்து நிறைய சினிமா தொழில்நுட்ப துறையினரும் ஆச்சரியமடைந்துள்ளனர். இவரது இயக்கத்தில் வெளியான “பொல்லாதவன்” திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதை தொடர்ந்து, “ஆடுகளம்” மற்றும் “வடசென்னை” போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் திரைப்படங்களாக அமைந்தது. முதல் படம் முதலே வெற்றித்தர தொடங்கிய இந்த கூட்டணி, “பொல்லாதவன்” தொடங்கி “அசுரன்” வரை மெகாஹிட் திரைப்படங்களை தந்து வருகிறது. இதனால் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் […]

Continue reading …

கேன்ஸ் பட விழா! சிகப்பு கம்பள வரவேற்பு!

Comments Off on கேன்ஸ் பட விழா! சிகப்பு கம்பள வரவேற்பு!

தற்போது பிரான்ஸ் நாட்டில் உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உலகெங்கிலுமிருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவில், இந்த ஆண்டு இந்திய திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் பங்கேற்றுள்ளனர். சிகப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில், கமல்ஹாசன், மாதவன், பா.ரஞ்சித், ஏ.ஆர்.ரஹ்மான், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், தமன்னா, பூஜா ஹெக்டே, நவாசுதின் சித்திக், ஊர்வசி ரவ்துலா உள்ளிட்டோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேன்ஸ் விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் “லே மஸ்க்“ திரைப்படம், மாதவன் இயக்கி […]

Continue reading …

கருப்புப் பெட்டியின் பகீர் தகவல்!

Comments Off on கருப்புப் பெட்டியின் பகீர் தகவல்!

கருப்பு பெட்டியை ஆராய்ந்தபோது திட்டமிட்டு விமான விபத்து நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவில் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி குவாங்சி மாகாணத்தில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளானது. இந்த விமான விபத்தில் விமானத்தில் சென்ற 132 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் இருந்த கருப்புப் பெட்டிகளை கண்டுபிடிக்கப்பட்டு அமெரிக்க புலனாய்வு துறையால் ஆய்வு செய்யப்பட்டது. அதில் விமானத்தில் விபத்திற்கு முன் எந்த பழுதும் ஏற்படவில்லை என்றும், விமானத்தை இயக்கியவர்களில் யாரேனும் ஒருவர் […]

Continue reading …

பேருந்துகள் மோதிய விபத்தில் 40 பேர் படுகாயம்!

Comments Off on பேருந்துகள் மோதிய விபத்தில் 40 பேர் படுகாயம்!

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேராக மோதியதில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரிக்குச் சொந்தமான கல்லூரி பேருந்து நேற்று மாலை கல்லூரி முடிந்த பின் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சங்ககிரி வழியாக எடப்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. எடப்பாடி சங்ககிரி பிரதான சாலையில் வந்தபோது, அப்பகுதியில் கன மழை பெய்து கொண்டிருந்தது. கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் […]

Continue reading …

பரீட்சை பேப்பரை ஜூன் 1 முதல் திருத்த துவங்கலாம்!

Comments Off on பரீட்சை பேப்பரை ஜூன் 1 முதல் திருத்த துவங்கலாம்!

விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்வு எழுதிய 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்ய பணி மூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டுமென பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. 11 […]

Continue reading …

ரஷ்யா அதிபருக்கு கனடா நுழைய தடை!

Comments Off on ரஷ்யா அதிபருக்கு கனடா நுழைய தடை!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட ரஷ்ய ராணுவத்தை சேர்ந்தவர்களுக்கு கனடாவில் நுழைவதற்கு தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது கடந்த பல மாதங்களாக போர் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைனும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் இந்த போரை உலக நாடுகள் பலவும் கண்டித்து வருகின்றன. கனடா அரசு இந்த போர் விவகாரத்தில் ரஷ்யாவை கண்டித்துள்ளதுடன் உக்ரைனில் இருந்து அகதிகளாய் வெளியேறும் […]

Continue reading …

பேரறிவாளன் விடுதலை; முதல்வர் வாழ்த்து!

Comments Off on பேரறிவாளன் விடுதலை; முதல்வர் வாழ்த்து!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுவித்து இன்று உச்சநீதிமன்றம் உத்தவை பிறப்பித்தது. அதை தொடர்ந்து பலரும் பேரறிவாளன் விடுதலைக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். பேரறிவாளன் விடுதலை குறித்து […]

Continue reading …

“கோப்ரா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Comments Off on “கோப்ரா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மீண்டும் “கோப்ரா” திரைப்படத்தின் படப்பிடிப்பின் பணிகள் தொடங்கியிருக்கிறது. “கோப்ரா” திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதம் என சொல்லப்படுகிறது. இதுவரை விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக “கோப்ரா” உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வந்த கோப்ரா கடந்த மாதம் முடிவடைந்தது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது. இப்போது ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் […]

Continue reading …

6ஜி பற்றி பிரதமர் மோடி தகவல்!

Comments Off on 6ஜி பற்றி பிரதமர் மோடி தகவல்!

இந்தியாவில் 6ஜி சேவை எப்போது என்பது குறித்த தகவலை டிராய் அமைப்பின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். இந்தியாவில் 5ஜி சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால், அதே நேரத்தில் விரைவில் தொடங்கப்படுதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் 6ஜி சேவை அடுத்த பத்தாண்டுகளில் நம்மால் தொடங்க முடியும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல் 5ஜி சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டால் 450 பில்லியன் பொருளாதாரத்திற்கு பங்காற்றும் என்றும் பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

Continue reading …