Home » Posts tagged with » Netrikkan (Page 53)

நடிகர் அக்சய்குமாரின் முதல் வாக்குப்பதிவு!

Comments Off on நடிகர் அக்சய்குமாரின் முதல் வாக்குப்பதிவு!

இன்று முதல் முதலாக பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் தனது வாக்கை பதிவு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்தாலும் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் கனடா குடியுரிமை வைத்திருந்தார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தது. கனடா குடியுரிமையை திரும்ப கொடுத்துவிட்டு அவர் இந்திய குடியுரிமை கேட்டு பெற்றார். இந்திய குடியுரிமை பெற்றபின் அவர் முதல் முதலாக இன்று மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம், “இந்தியா வளர்ச்சி […]

Continue reading …

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு? வானிலை மையம் தகவல்!

Comments Off on வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு? வானிலை மையம் தகவல்!

வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம், “மே 22ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். அது வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களிலும் புதுவையிலும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். இந்த காற்றழுத்த தாழ்வு […]

Continue reading …

மாடுகளுக்கும் லைசென்ஸ் வேண்டுமா?

Comments Off on மாடுகளுக்கும் லைசென்ஸ் வேண்டுமா?

மாநகராட்சியிடம் நாய் வளர்ப்பவர்கள் லைசென்ஸ் பெற வேண்டும் என்று கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. நாய் பொதுமக்களை கடித்தால் நாயின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாய்கள் மட்டுமின்றி மாடுகள் முட்டியும் பலர் காயமடைவதோடு மட்டுமல்லாமல், உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, மாடுகள் வளர்க்கவும் லைசன்ஸ் வேண்டும் என்று சென்னை மாநகராட்சி விரைவில் உத்தரவிட இருப்பதாக கூறப்படுகிறது. மாடுகள் வளர்ப்பவர்கள் அதை சாலைகளில் மேய விடுவதால் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் அவதியில் ஆளாகின்றனர். குறிப்பாக பள்ளி கல்லூரிக்கு செல்வோர் […]

Continue reading …

அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!

Comments Off on அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!

இலங்கையில் அதானி நிறுவனம் மேற்கொண்டுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கையின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மன்னார், பூணெரின் ஆகிய இடங்களில் 484 மெகா வாட் காற்றாலை மின்நிலையங்களை உருவாக்கும் அதானியின் திட்டங்களுக்கு அந்நாட்டு அரசு சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியது. இதற்காக இலங்கை அரசு அதானி கிரீன் எனர்ஜி இடையே 20 ஆண்டுகால ஒப்பந்தம் கையெழுத்தானத்தை அடுத்து, பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதானி நிறுவனம் […]

Continue reading …

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்!

Comments Off on இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்!

பெண் மருத்துவர் ஆந்திராவில் சிறுவனுக்கு திடீரென இதயம் என்ற நிலையில் அவரைப் முதலுதவி செய்து காப்பாற்றியுள்ளார். ஆந்திராவில் விஜயவாடாவில் 6 வயது சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அந்த சிறுவன் தூக்கி எறியப்பட்டு பேச்சு மூச்சு இன்றி கீழே விழுந்துவிட்டார். சிறுவனின் தந்தை அலறி அடித்துக் கொண்டு தனது மகனை தோளில் தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்றார். அந்த வழியாக மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்த டாக்டர் ரவள்ளி சென்று கொண்டிருந்தபோது […]

Continue reading …

விஜய் மாநாடு குறித்து சீமான் பதில்!

Comments Off on விஜய் மாநாடு குறித்து சீமான் பதில்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பங்கேற்பேன் என்று தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளரிடம், “10 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் நடக்கவில்லை. விடுதலை புலிகள் அமைப்பு மீது ஏன் தடை விதிக்க வேண்டும்? தடையை நீக்கி விட்டால் என்ன நடக்கும்? நாங்கள் வேகமாக வளர்ந்து விடுவோம் என்று பயம் தான். விடுதலை புலிகள் என்ற பெயருக்கே பயமா? கடந்த 10 ஆண்டுகளில் இதை சாதித்துள்ளோம் எனக் கூறி பாஜகவால் மக்களிடம் ஓட்டு கேட்க […]

Continue reading …

ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு!

Comments Off on ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு!

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற துணைவேந்தர் தனது மகளுக்காக 100 பவுன் நகைகள் சேர்த்து வைத்திருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி சின்னமணி தெருவை சேர்ந்த சுகுமார் மீன்வளக்கல்லூரியில் துணைவேந்தராக பணியாற்றி பின் ஓய்வு பெற்றார். சுகுமார் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்ற நேரம் பார்த்து மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த நூறு பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சுகுமார் சென்னையிலிருந்து திரும்பி வந்த பின் தனது வீட்டில் 100 பவுன் […]

Continue reading …

வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்!

Comments Off on வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்!

நேற்று குற்றால அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் உயிரிழந்தான். குற்றால அருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குற்றாலத்தில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பழைய குற்றாலம் அருவியில் நூற்றுக்கணக்கானோர் நேற்று (17.05.2024) குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள், அலறியடித்துக் கொண்டு ஓடினர். எனினும், குளிக்கும் பகுதியில் இருக்கும் கம்பிகளில் பலர் சிக்கிக் கொண்டனர். சிலர் வெள்ளப்பெருக்கில் இழுத்துச் […]

Continue reading …

ரணகளமான பாராளுமன்ற கூட்டம்!

Comments Off on ரணகளமான பாராளுமன்ற கூட்டம்!

இன்று தைவான் நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் பெண் எம்பிக்கள் உள்பட எம்பிக்கள் ஒருவரையொருவர் தாக்கி கட்டிப்புரண்டு சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் தைவான் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. சீன ஆதரவு பெற்ற கோமின் டாங் என்பவரை எதிர்த்து போட்டியிட்ட வில்லியம் சிங் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அவருக்கு ஆட்சி அமைக்க தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாராளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து விவாதம் இன்று […]

Continue reading …