தேசிய தேர்வுகள் வாரியம் முதுநிலை தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை என அறிவித்துள்ளது. 2022ம் ஆண்டிற்கான முதுநிலை படிப்புகளான எம்.டி. எம்.எஸ். படிப்புகளில் சேர முதுநிலை நீட் தேர்வு வரும் மே 21ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கபட்ட நிலையில், இந்த தேர்வை ஒத்தி வைக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர், இக்கோரிக்கையை ஏற்று ஜூலை 9ம் தேதிக்கு நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது. இதன் உண்மைத்தன்மை குறித்து, பத்திரிக்கை தகவல் மையம் ஒரு ஆய்வு செய்ததில், […]
Continue reading …“டான்” திரைப்படம் வரும் 13ம் தேதி வெளியாக உள்ளது. இதில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் டிரெய்லர் சற்றுமுன் வெளியாகி உள்ளது. டிரெய்லரில் சிவகார்த்திகேயன் காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன் என காட்சிகள் அதிகமாக உள்ளன. இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலும் இருக்கிறது. குறிப்பாக அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பக்காவாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தின் டிரெய்லர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Continue reading …தன் பாட்டியையே எரித்துக் கொலை செய்த பேத்திகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் 90 வயது மூதாட்டி சுப்பம்மாளை பராமரிக்க முடியவில்லை என்ற காரணத்திற்கால் அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்று அவரது பேத்திகள் மாரியம்மாள், மேரி ஆகிய இருவரும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, பாட்டியை எரித்ததை பேத்திகள் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Continue reading …கர்நாடக பாஜக எம்எல்ஏ ரூபாய் 2500 கோடி கொடுத்தால் முதலமைச்சர் பதவி வாங்கி தருகிறேன் என இடைத்தரகர் ஒருவர் தன்னிடம் கூறியதாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அரசியலில் இடைத்தரகர்கள் அதிகமாகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் என்பவர் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது டெல்லியில் இருந்து ஒரு இடைத்தரகர் வந்ததாகவும் அவர் தன்னிடம் 2500 கோடி ரூபாய் தயாராக வைத்திருங்கள் உங்களை முதலமைச்சர் காட்டுகிறேன் […]
Continue reading …பள்ளி கல்வித்துறை ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 14ம் தேதி முதல் கோடை விடுமுறை என அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்றும் அன்று அரை நாள் மட்டும் தேர்வு எழுத பள்ளிக்கு இருந்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி முதல் கோடை விடுமுறை என்றும் விடுமுறைக்கு பின் […]
Continue reading …கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் வரிசையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு இறைச்சிக்கடையில் இன்று கெட்டுப்போன 250 கிலோ கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கெட்டுபோன இறைச்சிகள் இறைச்சிக்கடைகளிலும், ஓட்டல்களில் பறிமுதல் செய்யப்பட்டு வருவது கோழிக்கறியை விரும்பி உண்ணும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Continue reading …காந்தி டாக்ஸின் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம்தான் இது. விஜய்சேதுபதி தன் கைவசம் 10 திரைப்படங்கள் வைத்துள்ளார். அதில் 3 இந்தி படங்களும் அடக்கம். இப்போது அவர் மௌனப்படமாக உருவாகும் “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தில் அரவிந்த் சாமியுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை கிஷோர் பாண்டுரங்க் பெலேகார் இயக்குகிறார். கடந்த ஆண்டே இத்திரைப்படம் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இப்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. […]
Continue reading …திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 2020ம் ஆண்டு கொரொனா காலத்தை ஒட்டி பல சவால்கள் இருந்த நிலையில், தமிழக கஜானாவும் காலியாக இருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் தனது சிறந்த நிர்வாகத்திறன் மற்றும் சவால்களை எதிர்கொண்டு மக்களுக்குப் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நிலையில், வருகிற மே 7ம் தேதியுடன் திமுக ஆட்சி […]
Continue reading …அரசு பேருந்துகளில் இனி 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார். போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தமிழக சட்டப்பேரவையில் இன்று பதிலுரை ஆற்றி வருகிறார். அவர் பேசியதாவது:- போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து மே 12ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும். மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும். அதோடு 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு […]
Continue reading …அதிமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் திடீரென இன்று காலமானார். உடுமலை 7-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் ரம்யா என்பவர் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ரம்யா கடந்த சில நாட்களாக, நோய்வாய்ப்பட்டு இருந்திருக்கிறார். ரம்யாவை, கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். தகவல் அறிந்த உடுமலை, திருப்பூர் மாவட்ட அதிமுகவினர், நகர்மன்ற உறுப்பினர்கள் அவருடைய மறைவுக்கு இரங்கல் […]
Continue reading …