பெங்களூர் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே ஐபிஎல் தொடரின் 31வது போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து பெங்களூர் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் லக்னோ அணி 6 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது. அதேபோல் பெங்களூர் அணியும் […]
Continue reading …பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் குற்றங்கள் இல்லாத தமிழகம் உருவாக இது ஒன்றுதான் வழி என கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: தூத்துக்குடி தாளமுத்து நகரில் குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட மோதலில் 2 வயது குழந்தையை சுவற்றில் அடித்து கணவன் கொலை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குடி மனிதனை கொடூரனாக்கும் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம் ஆகும். அனைத்துக் குற்றங்களுக்கும் பிறப்பிடமாக விளங்குவது மது தான். கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்கும் […]
Continue reading …மாடுகளை வளர்க்க லைசென்ஸ் கட்டாயம் என்று ராஜஸ்தான் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அம்மாநில மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் பசுக்கள் எருமை மாடுகள் வளர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் லைசென்ஸ் எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், லைசென்ஸ் பெறுவது கட்டாயம் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மாடுகள் நகர்ப்புறங்களில் வழிதவறி சுற்றித்திரிந்தால் ரூபாய் 10 ஆயிரம் மாடுகள் வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ராஜஸ்தான் […]
Continue reading …கடந்த சில நாட்களாக இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு காரணமாக ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கண்ணீர்புகை குண்டு, அதனை அடுத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அப்பாவி ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளதாகவும் மேலும் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் […]
Continue reading …மீனவர்களின் நலனுக்காக தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள கடல்பாசி வளர்க்கும் சிறப்புப் பூங்காவுக்கான நிலத்தை தேர்வு செய்து கொடுக்க தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் நிலம் ஒதுக்கியப் பின் அதற்கானப் பணிகள் தொடங்கும் என்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைக் கூறினார். பிரதமர் மோடியின் தலைமையிலான இந்த அரசு மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி […]
Continue reading …தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய அரசுப் பணியிடங்களில் போலிச்சான்றிதழ் கொடுத்து 300க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் வேலைக்குச் சேர்ந்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. முறைகேடான வழிகளில் தமிழர்களது வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து பறித்துவரும் வடமாநிலத்தவர்களின் மேலாதிக்கத்தைத் தடுக்கத்தவறி கைகட்டி வேடிக்கை பார்க்கும் திராவிட அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பாரத மின்மிகு நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், உள்ளிட்ட பல்வேறு இந்திய ஒன்றிய அரசு நிறுவனங்களில் 95 விழுக்காட்டிற்கு மேல் வடவர்களால் நிரப்பப்பட்டுப் […]
Continue reading …ஈஸ்டரை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார், “ஈஸ்டர் நன்னாளை முன்னிட்டு அனைத்து மக்கள், குறிப்பாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வழங்கும் கிறித்தவ சமுதாயத்தினருக்கு, எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பு, தியாகம் மற்றும் மன்னித்தலின் வழியை நாம் பின்பற்ற ஊக்கமளிக்கும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கொண்டாடும் பண்டிகையே ஈஸ்டர் ஆகும். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொண்டு ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்காக இணைந்து பணியாற்றுவோம். ஒற்றுமையின் முக்கியத்துவத்தை […]
Continue reading …மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வசதியாக, ஒவ்வொரு துறையின் உயர் பதவிகளிலும் அவர்களின் எண்ணிக்கை குறித்த அளவிடக் கூடிய புள்ளிவிவரங்களைத் திரட்ட மத்திய அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கான கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான விவரங்களைத் திரட்டவும் நீட்டிக்கப்பட வேண்டும். மத்திய அரசுப் பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டு இட ஒதுக்கீடு 1992&ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கிற்குப் பிறகு பல்வேறு மாற்றங்களை சந்தித்தது. […]
Continue reading …உதயநிதி ஸ்டாலின் “நெஞ்சுக்கு நீதி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் வெற்றி பெற்ற “ஆர்ட்டிகிள் 15” திரைப்படத்தின் ரீமேக் இது. நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி, அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் “நெஞ்சுக்கு நீதி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை “நேர்கொண்ட பார்வை” மற்றும் “வலிமை” ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இப்போது மொத்தமாக படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் […]
Continue reading …