அச்சுந்தன்வயல் ஊராட்சி மன்ற தலைவி சசிகலா லிங்கம், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர்கள் இராமநாதபுரம், அச்சுந்தன்வயல், உத்திரகோசமங்கை பகுதி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நவாஸ் கனிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நவாஸ்கனியை ஆதரித்து ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக திமுக ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு குடிநீர் பற்றாக்குறை ஓரளவு தீர்த்து வைக்கப்பட்டது. […]