Home » Posts tagged with » tngovt

3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து அதிர்ச்சியளிக்கிறது – அன்புமணி இராமதாஸ் !

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி  அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளில் சுட்டிக்காட்டப்பட்ட  சில குறைகள் சரி செய்யப்படாததைத் தொடர்ந்து அவற்றின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை  தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருக்கிறது.  தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை கடுமையானது; அளவுக்கு அதிகமானது; தேவையற்றது ஆகும். தமிழ்நாட்டின் 3 அரசு மருத்துவக் […]

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணைகளுக்கு திருமணம் !

Comments Off on இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணைகளுக்கு திருமணம் !

சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.4) திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.  திருமணத்தை நடத்திவைத்து முதல்வர் பேசியது : இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 31 இணையர்களுக்கு திருமணத்தை செய்து வைக்கக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது உள்ளபடியே பெருமையாக இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறது, எனக்கு மனநிறைவையும் தந்து கொண்டிருக்கிறது. […]

Continue reading …

பூஸ்டர் தடுப்பூசி மட்டுமே ஆயுதம்!

Comments Off on பூஸ்டர் தடுப்பூசி மட்டுமே ஆயுதம்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்வதுதான் ஆயுதமாகும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் பெரும்பாலானோர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தற்போது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் மக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. நேற்றைய கொரோனா பாதிப்பு 500ஐ நெருங்கிவிட்டதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க […]

Continue reading …

இளைஞர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி!

Comments Off on இளைஞர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி!

1000 மீனவ இளைஞர்களுக்கு கடலில் மூழ்கி தவிப்பவர்களைப் பாதுகாப்பதற்காக 14 கடலோர மாவட்டங்களில் உயிர் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 1000 மீனவ இளைஞர்களுக்கு உயிர் பாதுகாப்பு மீட்பு பயிற்சி திட்டத்தை இன்று துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பேரிடர் நேரத்தில் கடலில் தவிப்பவர்களை பத்திரமாக மீட்கும் இப்பயிற்சி திட்டத்திற்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

Continue reading …

அறநிலையத்துறை ஆய்வு!

Comments Off on அறநிலையத்துறை ஆய்வு!

அறநிலையத்துறை சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. ஆனால் நடராஜர் கோவிலின் தீட்சிதர்கள் இந்த ஆய்வுக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிர்வாக ரீதியான அலுவல் ஆய்வு செய்ய கோயிலுக்கு சென்றனர். அவர்களுக்கு கோயில் சார்பாக தீட்சிதர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு ஆய்வு தொடர்பான ஆவணங்கள் மற்றும் தணிக்கை விவரங்களை அதிகாரிகள் கோயில் தீட்சிதர்களிடம் கேட்டனர். அப்போது தீட்சிதர்கள் குழு சார்பில் வழக்குரைஞர் சந்திரசேகர், ‘சட்ட ரீதியான […]

Continue reading …

பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி!

Comments Off on பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி!
பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி!

அம்மா உணவகத்தின் மூலம் சென்னையில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்க ஏற்பாடு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 முதல் பள்ளிகள் ஆரம்பிக்க உள்ளது. அன்று முதல் இவ்வகுப்புகளுக்கு அட்மிஷன் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாகவே அட்மிஷனுக்கு தேவையான டோக்கன்களும் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் மழலையர் பள்ளி தொடங்கி உயர்நிலை பள்ளி வரை 281 அரசு […]

Continue reading …

உயர்கல்விக்கு உதவித்தொகை ரூ.1000

Comments Off on உயர்கல்விக்கு உதவித்தொகை ரூ.1000

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அடுத்த கல்வி ஆண்டு முதல் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் என்ற திட்டம் இருந்து வந்தது. அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அடுத்த கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும் என்று […]

Continue reading …

முதலமைச்சர் நிவாரணம்

Comments Off on முதலமைச்சர் நிவாரணம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகையில் நடைபெற்ற சப்பரத் திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் அறிவித்துள்ளார். நாகை மாவட்டம் திருச்செங்காட்டாங்குடியில் நடந்த சப்பரத் திருவிழாவில் உயிரிழந்தவரரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி அறிவித்து ஆறுதல் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாகை மாவட்டம் உத்திராபதீஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி தீபராஜன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, அவரின் குடும்பத்திற்கு ரூ. 5 […]

Continue reading …

தமிழக அரசு தொடர்ந்து 4 நாட்கள் விடுதுறை அறிவிப்பு

Comments Off on தமிழக அரசு தொடர்ந்து 4 நாட்கள் விடுதுறை அறிவிப்பு

மே மாதம் தொடர்ந்து பண்டிகை தினங்கள் வருவதையொட்டி தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆம். மே 1ம் தேதி உழைப்பாளர் தினம், மே 3ம் தேதி ரம்ஜான் பண்டிகை இவை இரண்டையும் கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இடையில் மே 2ம் தேதி விடுமுறை தினமாக அறிவிக்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்தது. மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், “தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை என்னும் ஈகைத் […]

Continue reading …

ராஜீவ்காந்தி மருத்துவமனை இடிப்பு!

Comments Off on ராஜீவ்காந்தி மருத்துவமனை இடிப்பு!

தீ விபத்து ஏற்பட்ட சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை கட்டிடம் இடிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நேற்று திடீரென சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரைதளத்தில் தீப்பிடித்த நிலையில் 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தன. அங்கிருந்த 128 நோயாளிகளை தீயணைப்பு துறையினர் மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்து மீட்டனர். இதுகுறித்து இன்று தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. […]

Continue reading …
Page 1 of 512345