“குட்னைட்” திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது, பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீசான இத்திரைப்படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது. இப்படத்தில் “ஜெய்பீம்” புகழ் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியால் கவனிக்கப்படும் இயக்குனரானார் விநாயக் சந்திரசேகர். இவர் இப்போது தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அவர் தன்னுடைய அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]