அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி முடிவு. சேலத்தில் அதிமுக பொது செயலாளருடன் நிர்வாகிகள் சந்திப்பு.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வருகின்ற பாராளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி முடிவு செய்து, இன்று சேலத்தில் அவருடைய இல்லத்தில் சந்தித்து, தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி மாநில தலைவர் பூமொழி மற்றும் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் எராளமானோர் கலந்து கொண்டனர்