மாலையிட்டு அழைத்து வந்து கௌரவித்த ஆசிரியர்கள்.

Filed under: தமிழகம் |

திருச்சி மாவட்டத்தில் இன்று அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை.

மாலையிட்டு அழைத்து வந்து கௌரவித்த ஆசிரியர்கள்.

2024 – 25 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் மார்ச் ஒன்று முதல் நடைபெற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வடக்கு சேர்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் வடக்கு சேர்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்றைய தினம் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் சற்குணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கன்வாடியில் பயின்று தொடக்கப் பள்ளிக்கு வருகை தரும் மாணவ மாணவிகளையும் தொடக்கப்பள்ளியில் பயின்று உயர்நிலைப் பள்ளிக்கு வருகை தரும் மாணவ மாணவிகளையும்
இரு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் நேரில் சென்று வரவேற்று மாலையிட்டு மரியாதையுடன் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் புதிய வகுப்பில் சேருகின்ற மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தி உடன் அழைத்து வர பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் வரிசையாக எதிர்நின்று வரவேற்று கரவோசை எழுப்பி பள்ளிக்குள் அழைத்துச் சென்றனர்.

பெற்றோர்களை உரிய மரியாதை உடன் அழைத்து வந்த மாணவ மாணவிகள் தங்கள் மகிழ்ச்சியை இனிப்புகள் தந்து வெளிப்படுத்தினர்.
பாரம்பரிய முறைப்படி மாணவ மாணவிகளை பள்ளிகளில் சேர்த்த அரசு பள்ளி ஆசிரியர்களின் இச்செயலுக்கு பெற்றோர்கள் மற்றும் ஊரார் மகிழ்ந்து பாராட்டினர்.