தி.மு.க விலும் பின்னர் த.வெ.கவிலும் நீக்கப்பட்ட பில்லா ஜெகனை மன்னித்து அரவனைத்தது தி.மு.க.
தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் திமுக-விற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்ததால் தவெக-கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
பில்லா ஜெகன் தொடர்ந்து திமுகவிற்கு ஆதரவாக பேசி வந்ததாகவும் இரண்டு கட்சியில் ஒரு நபர் செயல்பட முடியாது என தெரிவித்த நிலையிலும் திமுக மற்றும் தவெக என இரண்டு கட்சியில் இருந்து செயல்பட்டு வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த இரண்டு முறை கண்டித்தும் அவர் அதே செயல்பாட்டில் இருந்ததால் பில்லா ஜெகனை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசித்து அவர் கட்சியில் தொடர்வாரா இல்லை நிரந்தரமாக கட்சியை விட்டு நீக்கப்படுவரா என்ற நிலையில், த.வெ.க வில்
தனது ரூட்டை கிளியர் செய்த பில்லா ஜெகனுக்கு தெம்பூட்டும் விதமாக, ஏற்கனவே தற்காலிகமாக நீக்கப்பட்டு இருந்த தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பில்லா ஜெகன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதி அளிக்குமாறு கழகத் தலைவர் அவர்களிடம் கோரிக்கை வைத்ததினால் அந்த கோரிக்கையை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, இன்று முதல் கழக உறுப்பினராகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார். என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.