சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கூலித்தொழிலாளி உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் தொடர் போராட்டம்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் 35 வயதான கூலித்தொழிலாளி கிருஷ்ணகுமார் இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளன. கடந்த 15 ஆம் தேதி குள்ளப்பகவுண்டன்பட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள தோட்டத்திற்கு கிருஷ்ணகுமார் கூலிவேலைக்கு சென்றபோது பரிமளா என்பவரின் தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேக, பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் இறந்த கிருஷ்ணகுமார் இறப்பிற்கு நீதி வேண்டும் என்றும் தமிழக அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் சட்ட விரோதமாக மின்வேலியை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இறந்த கிருஷ்ணகுமார் குடும்பத்தினர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத அறைக்கு முன்பு , பிரேதத்தை வாங்காமல் அங்கேயே அமர்ந்து கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து இன்று வரை ஈடுபட்டு வருகின்றனர்.