250 கால்நடை உதவி மருத்துவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி…?

Filed under: தமிழகம் |

250 கால்நடை உதவி மருத்துவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி…?

செவி சாய்குமா அரசு..!

கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள், கறவை பசு வழங்குதல் மற்றும் ஏனைய திட்ட பணிகளுக்காக அப்போதைய அரசு கால்நடை உதவி மருத்துவர்கள் 843 பேரை 10(a)1 என்ற அடிப்படையில் நியமனம் செய்தது. அவர்களும் அரசு எடுத்த நோக்கத்தை கருத்தில் கொண்டு திறம்பட செயல்பட்டு திட்டப்பணிகளை சிறப்பாக நடத்திக் கொண்டு வந்தார்கள்.

இந்த நிலையில் அவர்கள் பணியில் நீடிப்பது தவறு என வெளியில் இருக்கும் சில கால்நடை மருத்துவர்கள் வழக்கு போட்டதன் விளைவாக 10(a) 1  கால்நடை உதவி மருத்துவர்கள் , சுப்ரீம் கோர்ட் சென்று பணியில் தொடர சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. தொடர்ந்து தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வந்தனர்.

இதற்கிடையில் தமிழக அரசு 2019 ஆம் ஆண்டில் 1021 கால்நடை உதவி மருத்துவர் காலி பணியிடங்களுக்கு ( 10 (a) 1 நீங்கலாக ) விண்ணப்பங்கள் பெற்று தேர்வும் நடந்து விட்டது. ஆனால் 10(a)1 கால்நடை உதவி மருத்துவர்கள் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்ததால் பணியிடங்கள் நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொறுப்பு ஏற்ற திமுக அரசு 10(a)1 கால்நடை உதவி மருத்துவர்களை அழைத்து IA பெட்டிஷன் போட்டு 10(a)1 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை நிரந்தரமாக்குவதற்கு நாங்கள் பொறுப்பு என 10(a)1 உதவி மருத்துவர்களுக்கு  உறுதியளித்தனர். ஆனால் 45 நாட்களுக்குள் டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் நடத்தி வருடத்திற்கு 5 மதிப்பெண் வீதம் 10 வருடங்களுக்கு 50 மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி நிரந்தரம் 2022 ஆம் வருடம் டிசம்பர் மாதத்திற்குள்  செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

ஆனால் கால்நடை உதவி மருத்துவர்கள் சங்க செயலாளர்   மற்றும்  கால்நடைத்துறை  அமைச்சகத்தின் PA  மற்றும் சிலர்  சேர்ந்து தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு வைத்தால் போட்டி குறைவாக இருக்கும் இன்னும் இரண்டு பேட்ச் கல்லூரி மாணவர்கள் வெளியே வந்தால் தான் போட்டி அதிகரித்து நம்மால் பணம் சம்பாதிக்க முடியும் என முடிவு செய்து ரெண்டு பேஜ் கல்லூரி மாணவர்கள் பட்டம் பெற்றவுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வு அழைப்பு விடுத்ததாக சொல்லப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து 10 (a)1 கால்நடை உதவி மருத்துவர்களும் , 45 வயதிற்கு மேல் ஆனாலும் தற்சமயம் கல்லூரி படிப்பை முடித்தவுடன் சேர்ந்து தேர்வுக்கு தயாராகி தேர்வு எழுதினர்.  ஆனால் கால்நடை உதவி மருத்துவர் சங்கத்தின் செயலாளர் மற்றும் அமைச்சகத்தில் உள்ள சிலர்  கோடிக்கணக்கில் ஆதாயம் பெற்றுக்கொண்டு  இப்போது புதியவர்களை அந்த இடத்தில் போட்டுவிட்டு  10 (a)1 கால்நடை உதவி மருத்துவர்கள் கிட்டத்தட்ட 250 பேரை பழிகடா ஆக்கப்போவதாக தகவல்கள் வந்துள்ளன.

அதுமட்டும் அல்லாமல்  TNPSC ம் சேர்ந்து ஊழலில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

எனவே தேர்வு எழுதியவர்கள் அனைவரின் Subject mark  , GK mark மற்றும் நேர்கானல் மதிப்பெண்களை தனித்தனியாக வெளியிட சரியான முறையில் விசாரனை நடத்தி posting ஐ தடுத்து நிறுத்தி மீண்டும் நியாயமான முறையில் தேர்வு நடத்திடவும் ,

அதற்கேற்றார் போல் புதியதாக  தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வந்துவிட்டதாக சொல்லப்படும் வேளையில், 10(a)1 கால்நடை மருத்துவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

அதிமுகவில் ஆட்சிகாலத்தில் பல்வேறு வாக்குறுதிகளுடன் பணியில் அமர்த்தப்பட்ட 10(a)1 கால்நடை உதவி மருத்துவர்களை திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் சரியாக வாதாடாமல் அதிமுக ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை ஆசை வார்த்தை காட்டி அவர்களை வேண்டுமென்றே பழிகடா ஆக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

முதல்வர் மு.க ஸ்டாலின் மனது வைத்தால் மட்டுமே நியாயம் கிடைக்கும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அரசு செவி சாய்க்குமா?