கொரோனா வைரஸ் காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் முதல் தியேட்டர்கள் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில் இருக்கும் படங்களை ஓ.டி.டியில் வெளியிட்டு வருகின்றனர். இதில் முதலாவதாக ஜோதிகா நடித்த பொன்மகள்வந்தாள் திரைப்படம் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய அரசு தியேட்டர்களை திறப்பதற்கும் மற்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதைக் கொண்டு இன்றிலிருந்து டெல்லி, கர்நாடகா, புதுச்சேரி, கொல்கத்தா ஆகிய இடங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. தியேட்டர்களுக்கு சமூக இடைவெளி, உடல் வெப்ப நிலை, முகக்கவசம் அணிவது ஆகிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் முதற்கட்டமாக சண்முக, ராஜா என்கிற இரண்டு தியேட்டர்களில் மட்டும் திறக்கப்படுகிறது. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கை வரலாறு படம் ரிலீசாக உள்ளது. பிரதமர் மோடியைச் கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.