விவசாயிகளின் கோரிக்கை ஏற்று வடிகால் வசதி செய்து தர களத்தில் இறங்கிய தேனி எம்.பி.
தேனி தொகுதி எம்.பியாக இருப்பவர் ரவீந்தரநாத். போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி பூதிப்புரம் பேரூராட்சி அருகே நான்கு வழிச்சாலையின் இணைப்புச்சாலை அருகே விவசாய நிலங்களில் தண்ணீர் பெருகி நிற்பதால் விவசாயம் செய்ய இயலாத நிலையில் விவசாயிகள் தேனி எம்.பியிடம் கோரிக்கை வைக்க,
விவசாயிகளிம் கோரிக்கையை ஏற்று உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிளுடன் பார்வையிட்டு மேற்கு பக்கம் உள்ள அணுகுசாலை அருகில் தண்ணீர் கடந்து செல்ல வடிகால் வசதி ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகோள் வைத்துள்ளார். எம்.பி ரவீந்திரநாத்தின் இந்த செயலுக்கு விவசாயிகள் தங்கள் நன்றியினை தெரிவித்தனர்.