கும்பக்கரை அருவியில்  சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. கொட்டும் அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள் .

Filed under: தமிழகம் |

கும்பக்கரை அருவியில்  சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.
கொட்டும் அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

தேனி மாவட்டத்திற்கு கடந்த 10 நாட்களாக கன மழை மற்றும் அதி கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்ததால் அருவியில் திடீர் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவான நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உத்தரவின் அடிப்படையில் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 19ஆம் தேதி முதல் அருவியில் குளிக்க தடை விதித்தனர்.

மேலும் தற்போது கனமழை எச்சரிக்கை விளக்கிக் கொள்ளப்பட்டதால் கும்பக்கரை அருவியில் 8 நாட்களுக்கு பின்பு கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குறித்த வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். கோடை விடுமுறை முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதித்ததால் அதிகாலையில் இருந்து வெளியூர் மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் கும்பக்கரை அருவியில் குளித்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.