திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் மதச்சார்பின்மையைச் சிதைக்கும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும் அரசியல் ஆதாயம் தேடும் பாசிச பாஜக அரசைக் கண்டித்து
இன்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவனின் அறிவுறுத்தலின் பேரில்
மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்ற வருகிறது.
இதன் ஒரு பகுதியாக
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கனியமுதன், புல்லட்லாரன்ஸ், சக்திஆற்றலரசு, கலைச்செல்வன், குருஅன்புச்செல்வம் ஆகியோர் தலைமையில் திருச்சி – கரூர் மண்டல செயலாளர் தமிழாதன் ஒருங்கிணைப்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையை இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாநிலச் செயலாளர் குடந்தை தமிழினி வழங்கினார்.
தொடர்ந்து மத்திய மோடி அரசு அமல்படுத்தியுள்ள சிஏஏ சட்டத்தை கண்டித்தும், பாசிச மோடி அரசின் எதர்சி அதிகாரப் போக்கை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில்
திருச்சி மண்டல துணைச் செயலாளர் பொன்.முருகேசன், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளரும், திருச்சி மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன், இளஞ்சிறுத்தைகள் பாசறையில் மாநிலத் துணைச் செயலாளர் அரசு, இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநிலத் துணைச் செயலாளர் புரோஸ்கான், பொறியாளர் மாநில துணைச் செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் சந்தனமொழி, மற்றும்
மாநில, மாவட்ட, நகர, நிர்வாகிகள் திரளாக கலந்து கொன்டனர்.