17 ஆயிரம் குடும்பத்துக்கு உதவி செய்த நடிகர் விஜய் தேவரகொண்டா!

Filed under: சினிமா |

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவில் பல தகவல்களை அரசு அறிவித்துள்ளது.

தற்போது இந்த ஊரடங்கள் கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு பிரபலங்கள், நடிகர்கள், தன்னார்வலர்கள் போன்றவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி , கீதகோவிந்தம் படங்களால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா.

இவர் தன்னுடைய தேவரகொண்டா அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவிகளைச் செய்துள்ளார். இவர் இதுவரை ரூபாய் 1.7 கோடி நிதியில் 17 ஆயிரத்து 723 குடும்பத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார்.

மேலும், 8,505 தன்னார்வ தொண்டர்களை தன்னுடைய அறக்கட்டளையில் இணைத்து 1.5 கோடி நிதி திரட்டி 58 ஆயிரத்து 808 குடும்பத்திற்கு உதவி செய்துள்ளார்.