இந்தியாவில் கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது வெட்டுக்கிளிகளின் கூட்டம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியே வந்து இந்தியாவின் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள விவசாய பயிர்களை நாசம் படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்கு மாநில மற்றும் மத்திய அரசும் தீவிர நடவடிக்கைகை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பது போன்றவற்றைக் கொண்டு விரட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் வெட்டுக்கிளிகளை கொண்டு பலரும் மீம்ஸ் உருவாக்கி வருகின்றனர். தற்போது நடிகர் விவேக் நடித்த ரன் படத்தில் உலா காட்சியின் புகைப்படத்தை கொண்டு மீம்ஸ் உருவாக்கியுள்ளனர். இந்து மீம்ஸ் புகைப்படத்தை நடிகர் விவேக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் கூறியது: ஒரு படத்தை வச்சிக்கிட்டு என்னவெல்லாம் சொல்ரீங்க!! யாரை எல்லாம் ஓட்டுரீங்க!! “Memes பசங்க ஐடியா உள்ள பசங்க என பாராட்டியுள்ளார்.