ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு!

Filed under: சென்னை,விளையாட்டு |

ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடக்கவிருந்த நிலையில் தற்போது கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 15, 16 தேதிகளில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டு சென்னை தீவுத்திடல் அருகே தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. எந்த தேதியும் குறிப்பிடாமல் ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சென்னை கார் பந்தயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். அவர், ‘கார் பந்தயம் நடத்த ரூ.240 கோடி திமுக அரசு செலவிடுவது ஏன்? ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் தத்தளிக்கிறது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. பல்வேறு திட்டங்களுக்கு நிதியில்லாமல் இருக்கும் நிலையில், பந்தயத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்திருந்தார்.