Home » Archives by category » சென்னை

பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல், செல்வ பிரபுவுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவிப்பு

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற தமிழக தடகள வீரர்கள் பிரவீன் சித்ரவேல், செல்வ பிரபு ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் முதல்வர் விஜய்.  முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேல், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கு எனது மனமார்ந்த […]

எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு ஆதரவு – முதல்வர் விஜய் !

Comments Off on எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு ஆதரவு – முதல்வர் விஜய் !

ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரானது. நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, […]

Continue reading …

கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயார் – துணை முதல்வர் உதயநிதி !

Comments Off on கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயார் – துணை முதல்வர் உதயநிதி !

சென்னை, சேப்பாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். சென்னையில் கனமழை பெய்தது, அமைச்சர்கள் துவங்கி, எம்.எல்.ஏ.,க்கள் கவுன்சிலர்கள் வரை களத்தில் இறங்கி, அனைத்து விதமான பாதுகாப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். இப்போது மழை லேசாகத்தான் பெய்துள்ளது. கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி. கனமழையில் கூட சென்னையில் எங்கும் தண்ணீர் […]

Continue reading …

சென்னை – கடற்கரை மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

Comments Off on சென்னை – கடற்கரை மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

தென்னக ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், “சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 9.10, 9.30 ஆகிய நேரங்களிலும், நாளை காலை 4.15 மணிக்கும் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, தாம்பரத்திலிருந்து இன்று இரவு 10.40, 11.20, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் ரத்து […]

Continue reading …

நடிகர் விமலுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு!

Comments Off on நடிகர் விமலுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு!

விமல் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான “மன்னர் வகையறா” படத்திற்கு அரசு பிலிம்ஸ் கோபி என்பவர் ரூ.5 கோடி கடனாக கொடுத்திருந்தார். கோபியிடம் படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறிய-ள்ளார் விமல். ஆனால் சொன்னபடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் 2020ம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார் கோபி. இதனை மழுங்கடிப்பதற்காகவும், பணம் கொடுக்காமல் தப்பிப்பதற்காகவும் கோபி, சிங்காரவேலன் ஆகியோர் மீதுவிருகம்பாக்கம் காவல் நிலையத்தில் […]

Continue reading …

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் அனுமதி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர். அவர்களில் திருமலை என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஜூலை 5ஆம் தேதி தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையில் தொடர்புடையவர்கள் என 20க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருமலை என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து […]

Continue reading …

எலியட்ஸ் கடற்கரையில் மரப்பாதை!

Comments Off on எலியட்ஸ் கடற்கரையில் மரப்பாதை!

மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக மரப்பாதை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் ரூ.1 கோடியே 61 லட்சத்தில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையை ரசிக்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சி நிர்வாகம், மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் சிறப்பு சுற்றுச்சூழல் அனுமதி பெற்று சென்னை மெரினா கடற்கரையில் 380 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் மரப்பாதை அமைத்து கொடுத்துள்ளது. இது மாற்றுத் திறனாளிகள் மற்றும் […]

Continue reading …

ஆம்ஸ்ட்ராங்க் குடும்பத்துக்கு கொலை மிரட்டல்?

Comments Off on ஆம்ஸ்ட்ராங்க் குடும்பத்துக்கு கொலை மிரட்டல்?

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பள்ளி தாளாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங்க் அவரது வீட்டின் முன்னே மர்ம நபர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கில் பல ரவுடிகளை போலீசார் கைது செய்தபோது ரவுடி திருவெங்கடம் என்பவர் எண்கவுண்ட்டர் செய்யப்பட்டார். மேலும் விசாரணையில் இக்கொலை […]

Continue reading …

கனமழை குறித்து வானிலை அறிவிப்பு!

Comments Off on கனமழை குறித்து வானிலை அறிவிப்பு!

கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று கூட சென்னையில் நல்ல மழை பெய்தது. சென்னை வானிலை ஆய்வு மையம், “இன்று மாலை மற்றும் இரவு தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று மாலை அல்லது இரவு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், […]

Continue reading …

2040ல் சென்னையே இருக்காதா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Comments Off on 2040ல் சென்னையே இருக்காதா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

2040ல் சென்னையில் பெரும்பான்மை பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இயற்கை மாசுபாடுகள், வனங்களை அழித்தல் உள்ளிட்ட செயல்களால் உலகம் முழுவதுமே பருவநிலை மாற்றம் என்ற பெரிய இடர்பாட்டை எதிர்கொண்டுள்ளது. பருவநிலை மாற்றம், பூமியின் வெப்பநிலை அதிகரித்தல் ஆகிய காரணங்களால் பனிப்பாளங்கள் வேகமாக உருகி வருவதுடன் கடல் மட்டமும் உயர்ந்து வருகிறது. கடல் மட்டம் அதிகரிப்பதன் ஆபத்து குறித்து பெங்களூரை சேர்ந்த அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் முடிவுகள் […]

Continue reading …
Page 1 of 79123Next ›Last »