அக்க்ஷர நேரம் ஆரம்பம் !!!

Filed under: சினிமா |
IMG_6339உலகெங்கும் வசூல் சாதனை புரிந்து வரும் ‘ஆரம்பம்’ படத்தில் மத்திய  மந்திரி மகளாக நடித்து  அஜீத் குமாரின் குளிர் கண்ணாடியை  கழற்ற சொல்லும் காட்சியில் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான  அக்க்ஷர  அந்த காட்சியை பற்றியும் , ஆரம்பம் திரை படத்தை பற்றியும் , தன்னை பற்றியும் தன்னுடைய  கனவையும் இதோ நம்மோடு பகிர்ந்து  கொள்கிறார் .
‘ நான் அஜீத் சாருடைய தீவிர ரசிகை . அவருடன் நடிக்க வேண்டும் என்று மிக ஆவலாய் காத்து கொண்டு இருந்தவள் . என் நல்ல நேரம் அந்த தருணம் என் திரை உலக பயணத்தில் ஆரம்பத்திலே அமைந்தது. அஜீத் சாருடைய ரசிகர்கள் பலம் திரை அரங்கில் அந்த காட்சியை பார்க்கும் போது  தான் தெரிந்தது .  பயமாக இருந்தது என்றால் மிகை ஆகாது.  அந்த காட்சியில் நடிக்கும் போதே அஜீத் சார்தான் என்னை தைரியமூட்டினார் . இப்போது எனக்கு இந்த அளவுக்கு நல்ல பெயர் கிட்டி இருப்பதற்கும் அவரே காரணம் . அவர் ஒரு மிக சிறந்த மனிதர் என்பதை அவருடன் பழகிய நாட்களில் புரிந்து கொண்டேன் . ஆரம்பம் நாட்களை நான் என்றும் நினைவில் கொள்வேன் .
நான் ஒரு பரத கலைஞர் . சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் உண்டு . நாடோடிகள் ஹிந்தி பதிப்பான ‘Rang Race’ படத்தில்  நடித்து உள்ளேன் . எனக்கு பிடித்த நடிகர் holly wood  நடிகர் Bradley cooper . பிடித்த நடிகை கரீனா கபூர் , அவருடைய மெல்லிய இடை வாகும் அவர் தன்னை கட்டு கோப்பாய் வைத்து இருக்கும் அழகையும் நான் என்றுமே ரசிப்பவள் . விளையாட்டு துறையில் எனக்கு மிகவும் ஈடுபாடு உண்டு . நான் தேசிய அளவில் கை பந்து போட்டியில் கலந்து கொண்டவள். விளையாட்டு துறையில் உள்ளதனாலோ   என்னவோ எனக்கு மன உறுதியும் திடமும் அதிகம் . அந்த உறுதியோடு தமிழ் திரை உலகில் ஒரு நிரந்தரமான முக்கிய இடத்தை பிடிப்பேன் ‘ என்கிறார்  அக்க்ஷர .