நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ஆம் தேதி கல்யாணம் – இதோ மாப்பிள்ளையின் புகைப்படம்!

Filed under: சினிமா |

நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30 ஆம் திகதி கல்யாணம் என அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர்தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சிறப்பாக நடித்து முன்னணி நடிகையாக முன்னேறி வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும் கல்யாண நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியாகியது. அதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர் எனவும் கூறப்பட்டது. ஆனால், இதைப்பற்றி காஜல் எந்த அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.

https://twitter.com/MsKajalAggarwal/status/1313357505724997633

தற்போது, இந்த தகவல்கள் உண்மை எனவும் அவருக்கு அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் கல்யாணம் நடக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த செய்தியை அவரின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.