அஜித்தின் ஜோடியாகிறார் மஞ்சு வாரியர்!

Filed under: சினிமா |

அஜித்தின் அடுத்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர் ஜோடியாகிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

வலிமை படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த திரைப்படம் AK61. படப்பிடிப்பு ஐதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இப்படம் பிரபல வெப் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ போல வங்கி கொள்ளை சம்மந்தமாக இத்திரைக்கதை உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது.

பல ஆண்டுகள் கழித்து அஜித் இத்திரைப்படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது. இப்படத்தில் “சார்பேட்டா பரம்பரை” பட புகழ் ஜான் கொக்கேன் மற்றும் பலர் நடிப்பதாக கூறப்பட்டது. மேலும், அஜித் ஜோடியாக தபு, ராகுல் ப்ரீத்தி சிங் நடிப்பதாக அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. மலையாள மொழியில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தமிழ் சினிமாவில் தனுஷ் ஜோடியாக, “அசுரன்” திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர். இப்படத்தில் மஞ்சு வாரியார் தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக பேட்டியில் கூறியிருக்கிறார்.