அஜீத்குமாரின் புதிய அவதாரம்!

Filed under: சினிமா |

நடிகர் அஜீத்குமார் ஹெலிகாப்டர் ஓட்டுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜீத்குமார் நடிப்பதோடு மட்டுமின்றி, புகைப்படம், ட்ரோன்கள், துப்பாக்கி சுடுதல், பைக் ரைடிங், கார் ரேஸ் என ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது அவர் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. நடிகர் அஜீத் வினோத் இயக்கத்தில், அஜீத் 61 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு இடைவெளி விடப்பட்டுள்ளதால், அஜீத்குமார் தன் சக நடிகர்களுடன் இணைந்து வட மாநிலத்தில் பைக்கில் பயணம் சென்று வருகிறார். சமீபத்தில் மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் அஜீத்துடன் பைக் பயணம் சென்றபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது அஜீத்குமார், ஹெலிகாப்டர் இயக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. எனவே, அஜீத்குமார் விரைவில் பைலட் லைசென்ஸ் எடுத்தாலும் எடுக்கலாம் எனவும் புதிய முயற்சிகளில் ஈடுபடும் அஜீத்திற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வண்ணம் உள்ளனர்.