அஜீத்தின் படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Filed under: சினிமா |

எச் வினோத் இயக்கத்தில். நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற “கேங்க்ஸ்டா” என்ற பாடல் வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

அப்பதிவில் அதுமட்டுமின்றி இப்பாடலின் முழு வரிகளையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த வரிகள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இப்பாடலின் ஒவ்வொரு வரியும் ஆவேசத்தை தூண்டும் வகையில் ஆக்ரோஷமாக இருப்பதாக ரசிகர்கள் இந்த பாடலின் வரியை படித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடலை கேட்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளதாக அஜீத்தின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.