லைகா நிறுவனம் அஜீத்தின் “துணிவு” திரைப்படத்துக்கான புரமோஷன் பணிகளை வெளிநாட்டில் பிரம்மாண்டமாக செய்து வருகிறது.
எப்போதும் அஜீத் திரைப்படங்களுக்கு பெரியளவில் புரமோஷன் பணிகள் நடக்காது. ஆனாலும் அவர் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும். ஆனால் இம்முறை “துணிவு” திரைப்படத்துக்கு வெளிநாடுகளில் அதிகளவில் புரமோஷன்களை செய்கிறது. வெளிநாட்டு உரிமைகளைக் கைப்பற்றியுள்ள லைகா நிறுவனம். துபாயில் ஸ்கை டைவிங் செய்யும் ஒருவர் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து அந்தரத்தில் “துணிவு” திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்ட காட்சியை லைகா நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதுபோல டிசம்பர் 31ம் தேதி படத்தின் டிரெயிலரை புர்ஜ் கலிபா கட்டிடத்தில் ஒளிபரப்ப உள்ளது. அஜீத்தை வைத்து அடுத்த படத்தை தயாரிப்பதால் லைகா நிறுவனம் படத்தின் வியாபாரத்தையும் கணக்கில் கொண்டு விளம்பரத்துக்காக அதிக அளவில் தொகையை செலவு செய்வதாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் இவ்வளவு புரமோஷன்கள் நடந்தாலும், இந்தியாவுக்குள் பெரிதாக எந்த புரமோஷனும் நடக்கவில்லை.