அஜீத்துக்கு வில்லன் தனுஷா?

Filed under: சினிமா |

அஜீத் “துணிவு” திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் அஜீத் தனது 61வது படமான “துணிவு” படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி அஜீத்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் நடிகர் தனுஷை வில்லனாக நடிக்க விக்னேஷ் சிவன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது.