அஜீத் – ஆதிக் படத்தின் ஷூட்டிங் எப்போது?

Filed under: சினிமா |

“விடாமுயற்சி” திரைப்படத்தில் அஜீத் கவனம் செலுத்தி வருகிறார். இத்திரைப்படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்து வருகிறது. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது.

அஜீத் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அவர் இயக்கிய “மார்க் ஆண்டனி” திரைப்படம் வெற்றிபெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் இப்போது ஆதிக் ஈடுபட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது. மே மாதத்தில் “விடாமுயற்சி” ரிலீசாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.