அஜீத் ரசிகர் வழங்கிய பரிசு!

Filed under: சினிமா |

நடிகர் அஜீத்குமார் நடித்துவரும் “துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில், அஜீத், மஞ்சுவாரியார் ஆகிய நடிகர்களின் டப்பிங் பணிகள் முடிந்துள்ளன.

இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. சமீபத்தில், “துணிவு” பட இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் பற்றிய அப்டேட்டை கொடுத்தார். அதில் பாடலாசிரியர் வைசாக் எழுதியுள்ள “சில்லா சில்லா” என்ற பாடலை அனிருத் குரலில் ஒலிப்பதிவு செய்துள்ளதாக அறிவித்தார். இப்பாடலுக்கான புரமோஷன் வீடியோ பணிகள் நடந்து வருகிறது. நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் அஜீத்தை நேரில் சந்தித்து, அவருக்கு சாய்பாபா படத்தை பரிசாக வழங்கிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.