அதிகரிக்கும் கொரோனா! ஆளுநரைச் சந்தித்த தமிழக முதல்வர்!

Filed under: அரசியல்,தமிழகம் |

அதிகரிக்கும் கொரோனா! ஆளுநரைச் சந்தித்த தமிழக முதல்வர்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் ஆளுநரை சந்தித்துள்ளார் தமிழக முதல்வர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள போதும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதுவும் கடந்த 10 நாட்களாக மிக அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுவும் தலைநகர் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை தினமும் 1000 ஐ நெருங்குகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். சந்திப்பின் போது,  சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பில் தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி ஆளுநரிடம் விளக்கியுள்ளார் முதல்வர்.