அதிமுகவில் இணைந்த இயக்குநர் பாக்யராஜ்!

Filed under: அரசியல்,தமிழகம் |

இன்று நடிகர் மற்றும் இயக்குநர் கே.பாக்யராஜ் அதிமுகவில் இணைந்துள்ளார்.

எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுக ஆதரவாளராக இருந்த கே.பாக்யராஜ் இடையில் சில காலம் திமுக உள்ளிட்ட கட்சிக்கு மாறினார். பிறகு தனிக்கட்சியும் ஆரம்பித்தார். இந்நிலையில் இன்று திடீரென அவர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கே.பாக்யராஜ் பாஜகவுக்கு ஆதரவாக பேசியதால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.