பீகாரில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தகவல்!

Filed under: அரசியல் |

பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அங்கு கருத்துக்கணிப்பு நடைபெற்றத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என தகவல் கிடைத்துள்ளது.

பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் எந்த கூட்டணி வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் மற்றும் சிவோட்டர்ஸ் இணைந்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை 243 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

இதில் புதிய சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என தெரிவித்துள்ளது. பின்பு காங்கிரஸ் கூட்டணி 76 தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும் மற்றும் லோக் ஜனசக்தி ஐந்து தொகுதியில் வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.