அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

நாளை அ.தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம்டிசம்பர் 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் 18 மாத ஆட்சி காலத்தில் சொத்துவரி, மின்கட்டணம், பால்விலை உயர்வு உள்பட பல்வேறு சீர்கேடுகள் உள்ளதை அனைத்து கட்டணங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 9ம் தேதி அதாவது நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை புயல் உருவாகி இருப்பதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதால் நாளைய ஆர்ப்பாட்டம் டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.