உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு தமிழக பா.ஜ.க தலைவர் ஆறுதல்!

Filed under: தமிழகம் |

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் கிராமத்தில் முன்பகை காரணத்தால் பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி சில நாட்களுக்கு முன்பு எரித்துக் கொலை செய்தனர்.

இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அவர்கள் மாணவியின் வீட்டுக்கு சென்று அவருடைய பெற்றோர்களுக்கு தன்னுடைய ஆறுதலை தெரிவித்தார்.

மேலும் மாணவி ஜெயஸ்ரீயின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அவருடைய அஞ்சலி செலுத்தினார் மற்றும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகளும் தங்களுடைய அஞ்சலி செலுத்தினார்கள்.