அதிமுக ஆலோசனை கூட்டம்!

Filed under: அரசியல் |

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் வரும் டிசம்பர் 27ம் தேதி காலை 10 மணிக்கு தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக ஆலோசனைக் கூட்டத்தை ஒரு பக்கம் ஓபிஎஸ் கூட்ட இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை கூட்டத்தை கூட்டி இருக்கிறார்.