அதிமுக எம்பி சிவி சண்முகம் மருத்துவமனையில் அனுமதி?

Filed under: அரசியல்,தமிழகம் |

அதிமுக எம்பி சிவி சண்முகம் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற போராட்டத்தில் சி.வி. சண்முகம் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி பேட்டியளித்தார். முன்னாள் அதிமுக அமைச்சரும் எம்பியுமான சிவி சண்முகத்திற்கு திடீரென இதய கோளாறு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் இதய சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.