அதிமுக டிடிவி தினகரன் வசமாகும்; அண்ணாமலை!

Filed under: அரசியல்,தமிழகம் |

பாஜக தலைவர் அண்ணாமலை ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று தெரிவித்துள்ளார்.

வருகிற ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரத்தில், “டிடிவி தினகரன் கையில் அதிமுக முதலிலே சென்று இருந்தால் ஸ்டாலின் முதலமைச்சராகி இருக்க மாட்டார். அதிமுகவை ஒப்பந்ததாரர்களுக்கு தாரை வார்த்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவினர் அனைவரும் டிடிவி தினகரன் பக்கம் உள்ளனர். மக்களவைத் தேர்தலுக்குப் பின் அதிமுக டிடிவி தினகரன் வசமாகும்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.