அதிர்ச்சியான காரணம் கூறிய தமன்னா!

Filed under: சினிமா |

நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் “கேடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது “கல்லூரி” மற்றும் “அயன்” ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது சினிமாவில் 18 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. பாலிவுட்டில் அடுத்தடுத்து “ஜி கர்தா” மற்றும் “லஸ்ட் ஸ்டோரிஸ் 2” ஆகியவற்றில் நடித்துள்ளார். இரண்டுமே பாலியல் சம்மந்தப்பட்ட கதைக்களம் என்பதால் இரண்டிலுமே கவர்ச்சி கூடுதலாக நடித்துள்ளார் தமன்னா. அதிலும் “ஜிகர்தாவில்” டாப்லெஸ் மற்றும் உடலுறவு காட்சிகளிலும் நடித்திருப்பதால் அவரது ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். ஆபாச காட்சிகளில் எல்லை மீறியது குறித்து பேசியுள்ள தமன்னா, “கதையின் ஓட்டத்திற்கு மிகவும் தேவைப்பட்டதால் தான், அந்த காட்சியில் அப்படி நடித்தேன். ரிலேஷன்ஷிப் சம்பந்தமான கதை என்பதால் அதெல்லாம் இப்படி இருந்தால் தான் நன்றாக இருக்கும்” என்று விளக்கமளித்துள்ளார் தமன்னா.